Mersal

நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் அட்லி ஆகியோரின் வெற்றி கூட்டணியில் தயாராகி வரும் மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசரை விஜய் ரசிகர்கள் வெளியிட்டு, அதை வைரலாக்கியும் உள்ளனர்.

தெறி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் அட்லியும், நடிகர் விஜய்யும் மீண்டும் இனைந்துள்ள படம் மெர்சல். இது விஜய்யின் 61-வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் பிரமாண்டமான விழாவை ஏற்பாடு செய்து இந்தப் படத்தின் இசையை வெளியிட்ட நிலையில் படத்தின் டீசரும் விரைவில் வெளியிடப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.mersal audio teaser 1

அதிகம் படித்தவை:  சர்கார் முதல் பாதி எப்படி இருக்கு ? ட்விட்டர் திரைவிமர்சனம்.

ஆனால் டீசர் எப்போதோ வெளியாகும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விஜய் ரசிகர்களுக்கு இந்தத் தாமதம் ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது, இந்தக் கவலையை சரி செய்யும் வகையில் விஜய் ரசிகர்கள் சிலர் ‘பக்கா மாஸ்’ என்கிற பெயரில் மெர்சல் படத்தின் அனிமேஷன் டீசரை வெளியிட்டுள்ளது இணையத்தில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது.

அதிகம் படித்தவை:  விஜய் படங்களில் இதுவரை தொடாத உச்சத்தை தொட போகும் 'தெறி'

இந்த அனிமேஷன் டீசரில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் இருந்ததைப் போல் கருப்பு பனியனும், வேட்டியையும் கட்டி கொண்டு, முறுக்கு மீசை, நெற்றியில் பட்டை என விஜய்யின் தோற்றம் வடிவமைக்கப் பட்டுள்ளது. பலர் சுற்றி நின்று வேடிக்கை பார்க்க ஜல்லிக்கட்டு காளை ஒன்றை அவர் அடக்குவதைப் போல் இந்த 40 விநாடிகள் நீளமுள்ள டீசர் முடிவடைகிறது.