பரதனின் ‘பைரவா’ படத்திற்கு பிறகு ‘தளபதி’ விஜய் நடிப்பில் தயாராகி வரும் படம் ‘மெர்சல்’. அட்லி இயக்கி வரும் இப்படத்தில் விஜய் முதன்முறையாக 3 வேடங்களில் நடித்துள்ளார். தளபதிக்கு ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா என மூன்று நாயகிகளாம். விஜய்-க்கு எதிராக மோதும் ஸ்டைலிஷான வில்லன் வேடத்தில் இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளாராம்.

மேலும், முக்கிய வேடங்களில் சத்யராஜ், வடிவேலு, யோகி பாபு, சத்யன் ஆகியோர் நடித்துள்ளனராம். ‘தேனாண்டாள் ஸ்டுடியோ லிமிடெட்’ நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வரும் இதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அட்லியின் பர்த்டே ஸ்பெஷலாக ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஆளப்போறான் தமிழன், மெர்சல் அரசல், நீதானே பாடல்கள் போன்றவை ரசிகர்களை ஈர்த்த நிலையில், மெர்சல் டீசரும் வெளியாகியது, இதனை விஜய் ரசிகர்கள் சமூகவளைதலங்களில் ட்ரென்ட் ஆக்கி வருகின்றனர்.

மெர்சல் டீசர் வெளியாகி 10 நிமிடத்தில் 1 லட்சம் லைக் பெற்றுள்ளது, கபாலி விவேகம், தெரி அனைத்து ரெக்கார்டையும் முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது.

மாலை 6 மணிக்கு வெளிவந்த. இந்த டீசர் வெளிவந்த 30 நிமிடத்தில் 2.5 லட்சம் லைக்ஸை கடந்தது.இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடினார்கள் ,இதனைகண்டு பாலிவுட்டை சேர்ந்தவர்களும் ஆச்சர்யபடுகின்றனர்.

இந்த டீசர் தான் தற்போது உலகத்திலேயே அதிகம் பேர் லைக் செய்த டீசராக நம்பர் 1 இடத்தில் உள்ளது.இந்நிலையில் டீசர் வெளிவந்த 12 மணி நேரத்திலேயே ரியல் டைமில் 9 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மாபெரும் சாதனை நிகழ்த்தியது அனைவரும் அறிந்ததே.
இதுவரை வேறு எந்த டீசரும் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தியது இல்லையாம், மேலும், 685k பேர் இந்த டீசரை லைக் செய்தனர் அதும் 12 மணி நேரத்தில் உலக சாதனை படைத்தது அனைவரும் அறிந்ததே.இதோடு மட்டும் நிற்காமல் கண்டிப்பாக 1 மில்லியன் லைக்ஸ் கொண்டு வருவோம் என விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவ விட்டார்கள் அதனால் மேலும் மேலும் சாதனை படைத்து வருகிறது.

டீஸர் விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி, அனைத்து தரப்பு ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது. டீஸர் வெளியாகி ஐந்து நாட்களே ஆகியுள்ளது. அதற்குள் இப்படியும் ஒரு சாதனை படைத்துள்ளது .மெர்சல்  டீஸரை 2 கோடி பார்வையாளர்களுக்கு மேல் யூ-டியூபில் கண்டு ரசித்துள்ளனர், இவ்ளோ குறுகிய நாட்களில் இவ்ளோ பார்வையாளரை கடந்துள்ளது மேலும் 862k லைக்ஸ் பெற்றுள்ளது 189k டிஸ்லைக்ஸ் பெற்றுள்ளது . படத்தை தீபாவளி ரேஸில் களமிறக்கத் திட்டமிட்டுள்ளனர் படமும் பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.