அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான படம் ‘மெர்சல்’.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் இடம்பெற்றிருந்த மத்திய அரசின் பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. வரி, டிஜிட்டல் இந்தியா குறித்த வசனங்கள் மற்றும் காட்சிகள் தான் இந்தியா முழுவதும் சமீபத்தில் டிரெண்டாகியது.

mersal-box

படம் மருத்துவர்களின் தவறுகளை சுட்டிக்காட்டி பழிவாங்கும் கதை என்றாலும் மத்திய-மாநில அரசுகளை தாக்கும் காட்சிகளும் வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக பாஜக சார்பாக குற்றம்சாட்டப்பட்டது.

அரசியல் பிரச்சனையாக மாறியதால் ‘மெர்சல்’ படத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்தனர்.

mersal vijay
mersal vijay

கடந்த 4 நாட்களாக திரும்பிய திசையெல்லாம் இதைப்பற்றியே பேச்சு. பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் அந்த படத்தை இதுவரை பார்க்காதவர்களும் அப்படி என்னதான் இருக்கிறது படத்தில் என்று, ஒரு தடவை பார்த்து விடலாமோ என்று எண்ணிக் கொண்டிருக்கும்படி சிந்திக்க வைத்துவிட்டார்கள்.

அந்த அளவுக்கு ‘மெர்சல்’ படத்துக்கு அரசியல் வாதிகளே மிகப்பெரிய விளம்பரத்தை உருவாக்கி கொடுத்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும்.

இவ்வாறாக இந்தியா முழுவதும் பிரபலமான ‘மெர்சல்’ படத்திற்கு உலகளவிலும் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.

mersal

அமீர் கானின் `சீக்ரெட் சூப்பர் ஸ்டார்’ மற்றும் அஜய் தேவ்கனின் `கோல்மால் அகேன்’ படங்கள் வெளியாகியிருக்கும் நிலையில், ‘மெர்சல்’ படம் வெளியாகிய 4 நாட்களில் ஆஸ்திரேலியாவில் மட்டும் ‘மெர்சல்’ படம் 345,239 டாலர்களையும் (இந்திய மதிப்பில் 1.76 கோடி), மலேசியாவில் ரூ.3.16 கோடியும் வசூலித்துள்ளது.

அதேபோல் பிரிட்டனில் 4 நாட்களில் 283,359 பவுண்ட்களை (ரூ.2.43 கோடிகள்) வசூலித்துள்ளது. நியூசிலாந்தில் 2 நாட்களில் ரூ.9.32 லட்சத்தை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.