தளபதி விஜய் நடிப்பில் பலரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படம் மெர்சல். இப்படத்தை தெறி இயக்குனர் அட்லீ தான் இயக்கியுள்ளார்.ஏற்கனவே இப்படத்தின் இரண்டு போஸ்டர்கள் வெளிவந்து ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது, இதை தொடர்ந்து இன்று மூன்றாவது போஸ்டர் வெளிவந்துள்ளது.

இதனுடன் நாளை சிங்கிள் ட்ராக் வருவதாகவும் அறிவித்துள்ளனர், இந்த போஸ்ட்டரில் ‘ஆளப்போறான் தமிழன்’ என்று ஒரு வாசகம் வந்துள்ளது.இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது, ஏனெனில், விஜய்யின் அரசியலுக்கு இது ஒரு மறைமுக தகவலாக கூட இருக்கலாம்.

மேலும், இன்று தான் தலைவா படம் திரைக்கு வருவதாக இருந்து தள்ளி சென்ற நாள், இந்த நாளை விஜய் ரசிகர்கள் எளிதில் மறக்க மாட்டார்கள்.

தலைவா போஸ்ட்டரில் Time To Lead என்ற வாசகம் இடம்பெற்று அதனால் அவர் அடைந்த கஷ்டம் எல்லாம் தெரியும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சரியாக தலைவா ரிலிஸாகாமல் தள்ளி சென்ற அதே நாளில் ‘ஆளப்போறான் தமிழன்’ வாசகத்துடன் விஜய் போஸ்டர் ரிலிஸ் செய்தது தற்போது புரிந்திருக்கும்.