தேனாண்டாள் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் நூறாவது படமான இயக்குநர் அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்று வேடங்களில் நடித்த ‘மெர்சல்’ படம் தீபாவளியன்று வெளியானது.

mersal

அந்தப் படத்தில் இடம்பெற்றிருந்த ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான வசனங்களை நீக்க வேண்டும் என்று கூறி பா.ஜ.க. தலைவர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அந்தக் காட்சிகளை நீக்க வேண்டியதில்லை என்று கூறி நாடு முழுவதுமிருந்து படக்குழுவுக்கு ஆதரவுக் குரல்கள் எழுந்தன.

பல்வேறு கட்சிகளைச் சார்ந்த முக்கியத் தலைவர்கள் பா.ஜ.க-வின் இது மாதிரியான செயல், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறினர்.

mersal

இந்நிலையில், இந்தப் படத்தின் தெலுங்கு வெர்ஷனான ‘அதிரிந்தி’ படம், தமிழில் இருந்ததைப் போலவே யு/ஏ சான்றிதழுடன் சற்று தாமதாக ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நவம்பர் 9-ம் தேதி வெளிவந்தது.

இந்நிலையில், பல விமர்சனங்களுக்கு உட்பட்ட டிஜிட்டல் இந்தியா பற்றி வடிவேலு பேசும் வசனம், ஜி.எஸ்.டி பற்றி விஜய் பேசும் வசனம் ஆகியன மியூட் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

mersal

பல பிரச்சனைகளை எதிர் கொண்டு, வருமா வராதா என்ற சர்ச்சையில் சிக்கி ஒரு வழியாக அக்டோபர் 18ம் தேதி தீபாவளியன்று மிகப் பிரம்மாண்டமாக வெளியானது ‘மெர்சல்’ திரைப்படம்.

படம் வெளிவந்த பின்னும் டிமானிடைசேஷன், ஜிஎஸ்டி வரி ஆகிய வசனங்களால் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதுவே அந்தப் படத்தை 25 நாள் வரை ஓட வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை. 25 நாளில் 250 கோடியைத் தொட்டிருக்குமா என விஜய் ரசிகர்கள் இந்நேரம் கூகுள் செயது கொண்டிருப்பார்கள்.

mersal

ஆந்திரா, தெலுங்கானாவில் நேற்று முன்தினம் வெளியான இப்படத்தின் தெலுங்கு டப்பிங்கான ‘அதிரிந்தி’ படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இன்றும் நாளையும் அங்கு பல தியேட்டர்களில் 70 சதவீதம் வரை முன்பதிவிற்கான வரவேற்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள்.

25வது நாளான நேற்று 250 கோடியைக் கடக்கிறதோ இல்லையோ நாளைக்குள் 250 கோடியைக் கடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.

vijay mersal

விஜய் நடித்த படங்களிலேயே அதிக வசூலைப் பெற்றுள்ள படம் என்ற பெருமையைப் பெற்றுள்ள ‘மெர்சல்’ படத்தின் மூலம் தயாரிப்பாளருக்கும் நல்ல லாபம் கிடைத்துள்ளது.

அட்லீக்கு விஜய் மீண்டும் ஒரு படம் இயக்கும் வாய்ப்பைக் கொடுப்பார் என்பது மட்டும் உறுதி.