mersal

மெர்சல் பட டைட்டில் விவகாரம்-

விஜய் நடித்துள்ள மெர்சல் படத் தலைப்பின் மீதான இடைக்காலத் தடையை ரத்து செய்து, மெர்சல் படத்தின் தலைப்பை படக்குழு பயன்படுத்தலாம் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது, நாம் அறிந்த விஷயமே. இதன் பின் படத்தின் மார்க்கெட்டிங் மற்றும் ப்ரோமோஷன் வேளைகளில் வெறித்தனமாக இறங்கியுள்ளது தேனாண்டாள் பிலிம்ஸின் டீம். ட்ரைலர், ப்ரோமோ விடியோக்கள், போஸ்டர்கள் என்று தற்பொழுது அனைத்திலும் மெர்சல் என்ற  பெயரை வைத்தே ரெடி செய்துள்ளார்கள்.

ராஜமௌலி கருத்து-

இந்தப் படம் .ஆர். ரஹ்மானுக்கு 25. விஜய்க்கும் 61. தேணாண்டாள் ஃபிலிம்ஸுக்கு 100வது படம். மெர்சல் கதையை எழுதியிருப்பவர் ராஜமெளலியின் அப்பா விஜயேந்திர பிரசாத்.

“இந்த படத்திற்காக நான் காத்துக் கொண்டிருக்கிறேன். நிச்சயமாக சொல்கிறேன், இந்தப்படம் மிகப் பெரிய ஹிட் ஆகும்.” என்று ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

மெர்சல் படம் ஹிட் என்று ராஜமெளலியே சொல்லிவிட்டார். அப்பா தன் மகனுக்கு கதையை முன்கூட்டியே கூறியிருப்பார். அதை வைத்தே இவ்வளவு உறுதியாக ராஜமௌலி கூறுகிறார் என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட ஆரம்பித்தனர்.

மெர்சல் ப்ரோமோ வீடியோ-

மெர்சல் படம் சென்சார்க்கு அனுப்பப்பட்டது  , படத்தை பார்த்த தணிக்கை  குழுவினர் ‘யு/ஏ’ சான்றிதழ் அளித்ததாக  தகவல் வெளியானது. மேலும்   படத்தின் ட்ரெய்லர் வரும் 8-ம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக கிசு கிசுக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வெளியாகப் போவது ட்ரைலர் இல்லை, படத்தின் 20 நொடி ப்ரோமோ வீடியோ தான் என்பது உறுதி ஆகியுள்ளது.

பாகுபலி கனெக்க்ஷன்-

இன்று ஸ்டார் விஜயில் பாகுபலி 2  படத்தின் சிறப்புக் காட்சி மாலை 3 மணிக்கு திரையிடுகிறார்கள். அப்பொழுதே இந்த ப்ரோமோ, விளம்பர விடியோவாக வரப்போகிறது என்ற தகவல் உறுதி ஆகியுள்ளது.

இதையே ட்விட்டர்வாசிகள் “Mersal Promo Video” என்று ஹாஷ்டாக் இட்டு பகிர்ந்து வருகின்றனர். இந்த ப்ரோமோவை முன்னிறுத்தி நிறைய மீம்ஸ்கலை நாமும் பார்க்கமுடிகிறது.

இணையம் டு டிவி –

படத்தின் ப்ரோமோஷனுக்கு இணையத்தை நம்பவும் நிலை ஏற்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் உலகில் , படக்குழு  டிவியை பயன்படுத்துவது  சற்றே வித்தியாசமான முயற்சி தான். டிவியில் முதலில் வருமா, அல்லது முன்னரே யு டுயூ இப்பில் லீக் ஆகிவிடுமா என்ற குழப்பத்தில் உள்ளனர் தளபதியின் ரசிகர்கள்.

சினிமா பேட்டை காமெண்ட்ஸ்:

இந்த ப்ரோமோ வீடியோவிலாவது, எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் போன்றவர்களை  காட்டுங்க அட்லீ சார்.