fbpx
Connect with us

மெர்சல் 150 கோடி வசூல் என்பது சுத்த பொய்.!உண்மையை உடைத்த பிரபல விநியோகஸ்தர்.!

News | செய்திகள்

மெர்சல் 150 கோடி வசூல் என்பது சுத்த பொய்.!உண்மையை உடைத்த பிரபல விநியோகஸ்தர்.!

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து தீபாவளியன்று வெளியான மெர்சல் படம் தொடர்ந்து பல சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் சர்ச்சையைக் கிளப்பியதால் படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

விஜய் நடித்துள்ள மெர்சல்’ திரைப்படத்துக்குத் தடை விதிக்கக் கோரியும் அதற்கு வழங்கியுள்ள தணிக்கைச் சான்றிதழை திரும்பப் பெறக் கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் சில நாள்களுக்கு முன்னர் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது..

mersal vijay

mersal vijay

‘மெர்சல்’ படத்திற்கு எதிரான பிரச்னைகள் இன்னும் தீர்ந்தபாடில்லை. இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் எதிரான கருத்துகள் மெர்சல் திரைப்படத்தில் இருக்கின்றன.

குறிப்பாக, மத்திய அரசின் ஜி.எஸ்.டி மற்றும் டிஜிட்டல் இந்தியா திட்டங்கள் குறித்து தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன’ என்று அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

mersal-box

மெர்சல் தடை மீதான மனுவை அவசர வழக்காக ஏற்று விசாரிக்க வேண்டும் என்று மனுதாரரான வழக்கறிஞர் அஷ்வத்தாமன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்ற சென்னை உயர் நீதிமன்றம், இன்று இந்த வழக்கை விசாரித்தது. மெர்சல் படத்திற்கு இந்த வழக்குகள் விளம்பரமாகவே பயன்படுகின்றன என நீதிபதிகளும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

விஜய்யின் மெர்சல் படம் வெளியாகி 10 நாட்களுக்குள் 200 கோடி வசூலை நெருங்கிவிட்டதாக கூறப்பட்டது.

mersal

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள அபிராமி ராமநாதன் “சென்னையில் மெர்சல் வசூல் என்ன என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். படம் ஓடி முடிந்தபிறகு தான் தயாரிப்பாளருக்கு அதை தெரிவிப்போம். இப்போது 150 கோடி.. 200 கோடி என கூறுவது 99% பொய்” என கூறியுள்ளார்.

மேலும் இப்படி சொல்வது ரசிகர்களை தியேட்டருக்கு வரவைப்பதற்காக எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்தே தயாரிப்பாளர்கள் மேற்கொள்ளும் யுக்தி என அவர் தாக்கியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top