MERCURY - Karthik Subburaj - Prabhu Deva

குறும்படங்கள் மூலம் அறிமுகமாகி பிறகு பிட்சா, ஜிகர்தண்டா, இறைவி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.

karthik subburaj
Karthik Subburaj

இவர் கமல் நடித்த பேசும் படம் பாணியில் கதாபாத்திரங்கள் யாருமே பேசாத ஒரு ஊமைப் படத்தை தன் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் மூலம் தயாரித்து இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு மெர்குரி என்று பெயர் வைக்கப்பட்டது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

Mercury

இப்படத்தில் பிரபு தேவா, சனந்த் ரெட்டி, தீபக் பரமேஷ், ரம்யா நம்பீசன் உட்பட பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் சென்னை மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் நடைபெற்றது.

இப்படத்தில் வசனங்களே கிடையாது. முழுக்க பின்னணி இசை மூலமாக முழுப்படமும் இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இதில் வில்லனாக நடித்துள்ளார் பிரபுதேவா. திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு விவேக் ஹர்ஷன் தான் எடிட்டர்.

mercury release date

இந்நிலையில் இப்படத்தினை வரும் ஏப்ரல் 13 உலகெங்கும் ரிலீஸ் செய்யப்போவதாக இயக்குனர் தன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.