Tamil Cinema News | சினிமா செய்திகள்
சன்னி லியோனாக மாற ஆசை.. மீரா மிதுன் பேச்சால் கடுப்பான ரசிகர்கள்
ஏற்கனவே அழகிப் போட்டி நடத்த போகிறேன் எனக் கூறி பலரிடம் பணத்தை வாங்கி ஏமாற்றி பெயரை கெடுத்துக் கொண்ட மீரா மிதுன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உலகமே தன்னை கழுவி ஊற்றும் அளவுக்கு செய்துகொண்டார். அதுவும் சேரன் தன்னை தப்பாக பேசியது என்று சொன்னதெல்லாம் அபாண்டம்.
தற்போது இவரது நடவடிக்கைகளால் சமீபகாலமாக பட வாய்ப்புகள் எதுவும் வருவதில்லை. இதனால் அவ்வப்போது தன்னுடைய தம்மடிக்கும் புகைப்படங்களையும் கவர்ச்சியான புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு படவாய்ப்புகள் தேடி வந்தார்.
சமீபத்தில் உச்சகட்டமாக சென்று தனது நிர்வாண புகைப்படத்தையும் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார். இருந்தும் அவரை யாரும் கண்டு கொள்வதாய் இல்லை.
ஆனால் தற்போது பிரபல ஆபாசப்பட நடிகை சன்னி லியோன் போன்று நடிக்க விரும்புவதாக அவர் வெளியிட்டுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது சன்னி லியோன் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது.
சிறுவயதிலிருந்தே சன்னி லியோன் பட்ட கஷ்டங்களையும் தன் மீதான தவறான எண்ணங்களையும் தற்போது திரைப்படங்களின் மூலம் எப்படி மாற்றி வருகிறார் என்பதை வாழ்க்கை வரலாறாக யாராவது எடுக்க விருப்பப்பட்ட அதில் தான் நடிக்க விரும்புவதாக மீராமிதுன் கூறிய செய்திகளை கேட்டு, உங்களை அவருடன் கம்பேர் செய்து கொள்ளும் அளவுக்கு தகுதி இல்லை என ரசிகர்கள் கண்டபடி திட்டி வருகின்றனர்.
