குழந்தையை கடத்தியதாக நினைத்து மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கொடூரமாக கட்டி வைத்து அடித்த சம்பவம் மேற்குவங்கத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள முர்ஷிதாபார்தில் அடிக்கடி குழந்தை கடத்தல் சம்பவம் நடந்து வந்துள்ளது. இந்த நிலையில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை குழந்தை கடத்தியவராகக் கருதி, கயிற்றில் கட்டி வைத்து ஆளுக்கு ஆளுக்கு வன்மையாக அடித்து கொடுமைப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

மிதிப்பூர் பனானகர் கிராமத்தை சேர்ந்த இந்தப் பெண் முர்ஷிதாபாத்தில் உள்ள திலிப் கோஷ் வீட்டுக்குள் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்து வெளியேறியபோது கையில் புடவையை சுற்றி வைத்துள்ளார். இதனைக் கண்ட கிராமத்தினர் மயக்க மருந்து பயன்படுத்தி குழந்தைதை கடத்தியுள்ளார் என்று தவறாக புரிந்துகொண்டுள்ளனர். இளைஞர்கள் அனைவரும் சேர்ந்து அந்த பெண்ணை டிராக்டரில் கட்டிவைத்து 3 மணி நேரம் அடித்துள்ளனர். மேலும் அவளின் ஆடையை கிழித்து மொட்டை அடிக்க முயற்சித்துள்ளனர். தன்னை காப்பாற்றிக்கொள்ள பேச முயற்சித்தபோதும் அவரது மொழி சரியாக புரிந்து கொள்ள முடியாததால் மேலும் அவரை ஊர் மக்கள் அடித்து கொடுமைப்படுத்தியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.