kangana

கங்கனா ரணாவத்

இமாச்சல் மாநிலத்தில் ஒரு சிறிய கிராமத்தில் பிறந்தவர் கங்கனா ரணாவத். இவரது அம்மா ஆஷா, பள்ளி ஆசிரியை, அப்பா அமர்தீப், தொழிலதிபர். மாடலிங் துறையில் அசத்தி கொண்டிருந்த கங்கனா, கேங்ஸ்டார் என்ற இந்த படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

கங்கனா நம் தமிழில் ஜெயம் ரவியுடன் தாம் தூம் படத்தில் ஜோடி சேர்ந்தவர். நம் கோலிவுட்டை விட்டு இவர் சென்றாலும் பாலிவுட்டில் முக்கிய ஹீரோயின்களில் ஒருவர். இவரும் சர்ச்சையும் உடன் பிறவா சகோதரிகள் தான். தன் மனதில் பட்டத்தை வெளிப்படையாக பேசுபவர்.

‘மென்டல் ஹை கியா’

mental hai kya

கங்கனா – ராஜ்குமார் ராவுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் படம் ‘மென்டல் ஹை கியா’. பாலாஜி மோஷன் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தை பிரகாஷ் கோவேல்முடி இயக்குகிறார். இப்படத்தில் மன நலன் பற்றிய விஷயத்தை கையாண்டுள்ளனர் படக்குழு

படத்தின் போஸ்டர்கள்

mental hai kya

படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்ற வாரத்தில் ஐந்து நாட்களில் 10 போஸ்டர்கள் ரிலீஸ் செய்தது படக்குழு. ” கோ மெண்டல்” என தலைப்பிட்டு ரிலீஸ் செய்தனர்.

mental hai kya look one

போதை பழக்கம், கோபம், மனஅழுத்தம், தற்கொலை, மூர்க்கனாதனம் என ஒவ்வொரு போஸ்டரும் வேறு வேறு ஸ்டைலில் உள்ளது.

mental hai kya
mental hai kya

இந்த படத்தின் மூன்றாவது போஸ்டரில் இவர் குளியல் தொட்டியில் நிர்வாணமாக உட்கார்ந்து இருக்கும் படம் இடம்பெற்றுள்ளது. அதில் அவருடைய கையில் கத்தி இருக்கிறது.

mental hai kya look 3

சமீபத்தில் ஸ்ரீதேவி துபாயில் சொகுசு ஹோட்டலில் குளியல் தொட்டியில் மூழ்கி இறந்தார். இந்த நிலையில் கங்கனா ரணாவத் குளியல் தொட்டியில் நிர்வாண படம் பாலிவுட்டில் சலசலப்பையும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீதேவி அவர்களை இழிவு படுத்தும் விதத்தில் இந்த போஸ்டர் உள்ளது என நெட்டிசன்கள் கருது தெரிவித்து வருகின்றனர்.