India | இந்தியா
குஜராத்தில் கேவலம்.. பள்ளி மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை
குஜராத்தின் பூஜ் நகரில் செயல்பட்டு வரும் பள்ளியில் மாணவிகளின் உள்ளாடைகளை கழற்றி மாதவிடாய் சோதனை நடத்தி இருக்கிறார்கள்.
குஜராத்தின் பூஜ் நகரில் ஸ்ரீ சஹ்ஜானந்த் பெண்கள் கல்வி நிறுவனம் (எஸ்.எஸ்.ஜி.ஐ) இயங்குகிறது. இக்கல்வி நிறுவனத்தில் பி.காம்,, பி.ஏ., பி.எஸ்.சி ஆகிய படிப்புகளை சொல்லி தருகிறார்கள்.
மொத்தம் 1,500 பேர் இக்கல்வி நிறுவனத்தில் படிக்கின்றார்கள் கிராமப்புறங்களில் இருந்து வரும் 68 மாணவிகள் அங்குள்ள விடுதியில் தங்கி படிக்கின்றார்கள். இந்த விடுதியில் உள்ள வழிபாட்டு அறை பகுதிக்குள் மாதவிடாய் காலத்தில் மாணவிகள் நுழைவதற்கு தடை விதித்துள்ளார்கள்.
அதேபோல் மாதவிடாய் காலங்களில் பிற பெண்களை தொடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை சில மாணவிகள் மீறுவதாகவும் மாதவிடாய் நேரங்களில் கோவில் உள்ள பகுதிகளில் நுழைவதாகவும் கல்வி நிறுவன முதல்வர் ரிதா ரனிங்காவிடம் புகார் தெரிவித்தார்.
இதன்பேரில் வகுப்பறைகளில் இருந்த போது மாணவிகளை அழைத்து சென்ற முதல்வர் இழிவாகவும் மோசமான வார்த்தைகளிலும் திட்டினாராம். அப்போது யார் யாருக்கு மாதவிடாய் காலம் என கேட்டார்.
2 மாணவிகள் மட்டும் வரிசைகளில் இருந்து விலகி நின்றார்களாம். ஆனாலும் இதனை நம்பாத கல்லூரி முதல்வர், மற்ற மாணவிகள் அனைவரையும் கழிவறைக்கு அழைத்துச் சென்றுள்ளார்கள்.
அங்கு பேராசிரியைகள் முன்னிலையில் உள்ளாடைகளை கழற்றிச் சொல்லி மாதவிடாய் யாருக்கேனும் இருக்கிறதா? என சோதனை செய்து இருக்கிறார்கள்.
இந்த கொடூர சம்பவம் குறித்து கல்வி நிறுவனத்திடம் கேட்ட போது, அப்படி ஒரு சம்பவமே நடகக்வில்லை என கல்லூரி அறக்கட்டளை நிர்வாகி பிரவீன் பிந்த்ரோ கூறியிருக்கிறார்.
