Megha-Akash-udhayanithiஉதயநிதி ஸ்டாலின் இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு D.இமான் இசையமைக்க மதி ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் உதயநிதிக்கு ஜோடியாக மஞ்சிமாமோகன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சிம்புவுடன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்துள்ளார்.

நடிகர் விஷ்ணுவிஷாலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளன. அதேபோல வளர்ந்து வரும் இளம் நடிகையான மேகா ஆகாஷும் இந்த படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வந்துள்ளான. இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் இயக்குனர் பாலாஜிதரணிதரன் இயக்கும் அடுத்த படமான ஒரு பக்கக் கதை படத்தில் நடிகர் ஜெயராமின் மகனான காளிதாசுடன் இணைந்து நடித்துள்ளார்.