தனுஷ் ஜோடியாக ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்துள்ள மேகா ஆகாஷ் தான் அதர்வா நடிக்கவுள்ள படத்தின் ஹீரோயின்.

அதர்வா முரளி யின் ‘செம்ம போதை ஆகாத’, ‘இமைக்கா நொடிகள்’ இந்த இரண்டு படங்களும் விரைவில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில் இவரின் அடுத்த பட அறிவிப்பு வந்தது. இவன் தந்திரன்’ படத்தை தொடர்ந்து ஆர்.கண்ணன் அதர்வாவை வைத்து ஒரு படத்தை இயக்கவிருக்கிறார் என்ற தகவலை ஏற்கெனவே வெளியிட்டிருந்தோம்.

Director R.Kannan with Atharvaa & Producers.

இந்த பத்திற்கான கதாநாயகியாக மேகா ஆகாஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இப்படத்தில் விஸ்காம் ஸ்டுடண்டாக நடிக்கிறார் அவர். ஜனவரி மாதம் தொடங்கும் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவிருக்கிறார்.

#MeghaAakash

A post shared by Cinemapettai (@cinemapettaiweb) on

எல்லா வர்த்தக அம்சங்களும் நிறைந்த படமாம். நிறைய சண்டைக் காட்சிகள், பாடல்கள், விறு விறுப்பான திரைக்கதை என்று அமைத்துள்ளாராம் இயக்குனர்.

அதிகம் படித்தவை:  ஜிம்மிக்கி கம்மல் ஷெரில்-அன்னா, அனிருத், சூர்யா, விக்னேஷ் சிவன்: தானா சேர்ந்த கூட்டம்.

இப்படத்திற்கு இசை அமைக்கப்போவது ‘ரத்தன்’. இவர் அர்ஜுன் ரெட்டி படம் வாயிலாக உலக பேமஸ் ஆகிவிட்டார். இவர் முதல் படம் 2012ல் தெலுங்கில் ரிலீஸ் ஆனது. எனினும் இவர் தமிழ் சினிமாவிற்கு புதியவர் அல்ல. தமிழில் வாலிப ராஜா , டார்லிங் 2 படங்களுக்கு இவர் தான் மியூசிக் டைரக்டர்.

அதிகம் படித்தவை:  இளம் நடிகர்களை ஓரம் கட்டிய நயன்தாரா.! இரண்டாவது நாள் வசூலில் மிரட்டிய கோலமாவு கோகிலா.!

‘நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம்’ பட இயக்குனர் பாலாஜி தரணீதரனின் ‘ஒரு பக்க கதை’ படத்தில் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக இவர் நடித்துள்ள படத்தின் டீஸர் வெளியாகி நல்ல ரீச் ஆகியுள்ளது.

இந்நிலையில் இவர் மற்றோரு இளம் ஹீரோவுடன் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.