Tamil Cinema News | சினிமா செய்திகள்
மாஸ் பட்ஜெட்டில் உருவான காலா. ஆனால் வரவேற்பு என்னவோ சுமார் தான்
காலா படம் சுமாரான பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு இருக்குகிறது என நினைத்து கொண்டிருந்த கோலிவுட் ரசிகர்களுக்கு, தனுஷ் போட்டு இருக்கும் வழக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
பெரும்பாலும், தமிழ் சினிமாவில் தற்போது ஒரு படம் வெளியாவதற்கு பெரும் போராட்டமே நடைபெற்று வருகிறது. பல தடைகளை தாண்டி தான் எல்லா படங்களுமே திரையரங்குக்கு வர வேண்டிய நிலை இருக்கிறது. இப்பட்டியலில் புதிதாக இணைந்து இருக்கும் படம் காலா. இதில் என்ன பிரச்சனை? இங்கு எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், கர்நாடகா தான் இப்பிரச்சனையை கிள்ளி விட்டு இருக்கிறது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நேரம் அதிகம் எடுக்கப்பட்ட சமயம், தமிழகமே கொதித்தெழுந்தது. எல்லா இடத்திலும் போராட்டமே நிலவியது. சென்னையில் நடைபெற இருந்த ஐபிஎல் போட்டிகளையே வேறு இடத்துக்கும் மாற்றும் படி கோரிக்கை வைத்து அதை சில அமைப்புகள் செய்தும் முடித்தன. இந்த இடத்தில், அரசியல் களத்தில் இறங்கி இருக்கும் ரஜினிகாந்த், கர்நாடகாவிற்கு எதிராக தனது கருத்தை பதிவு செய்தார். அவர் என்ன நடக்கும் என அப்போது யோசித்தெல்லாம் இருக்கத்தான் மாட்டார்.
ஆனால், இந்த பிரச்சனையை சரியாக யுகித்தவர் தயாரிப்பாளர் தனுஷ். ஏப்ரல் மாதத்தில் குறிப்பிட்டது போல படத்தை வெளியிட்டால் கண்டிப்பாக வசூல் பாதிக்கப்படும். நடைபெற இருந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு வெளியீட்டை தள்ளி வைத்தார். புதிய அரசாங்கம் அமைந்ததும் இந்த பிரச்சனை மறைந்து விடும் என்பதே அவரின் ஐடியா. ஆனால், எங்கு மிஸ் செய்தாரோ? அவர் எண்ணியது போல கர்நாடகாவில் படத்தை வெளியிட கூடாது என சில அமைப்புகள் எச்சரிக்கை விட்டது. இதனால், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என கர்நாடகா வர்த்தக சபை படத்திற்கு தடை விதித்தது. இதனை நீக்க ஒரு பக்கம் தமிழ் தயாரிப்பாளர் சங்கம் பலகட்ட முயற்சிகளை செய்து வருகிறது.
தயாரிப்பாளர் தனுஷ், கர்நாடகாவில் வெளியிட பாதுகாப்பு கோரி அம்மாநில உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை இன்று தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் செய்திருக்கும் மனுவில், காலா படம் ரூ 140 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இதனால் படக்குழுவினரின் நலன் கருதி கர்நாடகாவில் படத்தை வெளியிட வழி செய்யுமாறு கேட்டு கொண்டுள்ளார். காலா படத்தின் பட்ஜெட்டால் கோலிவுட்டே செம ஷாக்கில் இருக்கின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, ’காலா’ படத்திற்கு வழக்கத்திற்கு மாறான சூழ்நிலை தமிழகத்தில் நிலவுகிறது. ஜூன் 7 மற்றும் 8ம் தேதிகளை தவிர, வார நாட்களில் ‘காலா’ படத்திற்கான முன்பதிவு பெரியளவு இல்லை என ஆன்லைன் டிக்கெட் ஆப்கள் தெளிவாக காட்டுகிறது.
