தமிழக அரசியல் நிலவரம் குறித்து டெல்லியில் தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் அக்கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தி ஆலோசனை மேற்கொண்டார். ப. சிதம்பரம், கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் கலந்துகொண்டனர். காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் ஆதரவு சசிகலாவுக்கா அல்லது ஓ.பன்னீர்செல்வத்துக்கா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்றிருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

கூட்டத்தில் பங்குபெற்ற தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்கள் சந்திப்பில்,’ராகுல் காந்தியிடம் தமிழகத்தின் சூழல் குறித்து விவரித்துள்ளோம். தமிழக ஆளுநர் இந்த விவகாரத்தில் அரசியலமைப்புக்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும்’ என்றார்.