மோட்டார் மோகன் காதலிக்கு நடந்த திடீர் திருமணம்.. காட்டுத் தீயாய் பரவும் புகைப்படம்

Meetha Raghunath : கடந்த ஆண்டு வெளியான நிறைய சின்ன பட்ஜெட் படங்கள் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்தது. அந்த வகையில் மணிகண்டன் மற்றும் மீதா ரகுநாத் நடிப்பில் வெளியான குட் நைட் படம் நல்ல வரவேற்பை பெற்றது.

குறட்டையை மையமாக வைத்து நகைச்சுவையாக இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது. இந்தப் படத்தின் கதை களம் மற்றும் நடிகர், நடிகைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மணிகண்டன் மோட்டார் மோகன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அவரது மனைவியாக பக்கத்து வீட்டு பெண் போல் மிகவும் எதார்த்தமாக நடித்து இளைஞர்களைக் கவர்ந்தார் மீதா ரகுநாத். இவர் தமிழில் முதலும் நீ முடிவும் நீ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமாகி இருந்தார்.

குட் நைட் நடிகை மீதா ரகுநாத்

இந்நிலையில் குட் நைட் படத்தில் நடித்த போது மணிகண்டன் மற்றும் மீதா இருவரும் காதலிப்பதாக கிசு கிசுக்கள் வெளியானது. ஆனால் இப்போது சத்தமே இல்லாமல் மீதாவின் திருமணம் முடிந்துள்ளது.

சினிமா பிரபலங்கள் இல்லாமல் அவர்களது உறவினர் மற்றும் நண்பர்களை வைத்து திருமணம் முடிந்துள்ளது. மேலும் மீதா ரகுநாத் தனது இன்ஸ்டா பக்கத்தில் திருமண புகைப்படங்களை பகிர்ந்து உள்ளார்.

இந்த புகைப்படங்களை பார்த்த சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் திருமண வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். திருமணத்திற்கு பிறகும் படங்களில் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்துள்ளனர்.

மீதா ரகுநாத் திருமண புகைப்படம்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →