கடந்த வாரம் வெளிவந்த படம் மீசைய முறுக்கு . இப்படத்தை இயக்கியதும் ஹிப்ஹாப் ஆதி தான். நடித்ததும் ஹிப்ஹாப் ஆதிதான். இவர் ஆல்பம் மூலம் பிரபலமானாலும் தனி ஒருவனில் நல்ல இசையை குடுத்து பெயர் எடுத்தார்..

இந்நிலையில் மீசைய முறுக்கு படத்திற்கு தமிழகத்தில் மிகப்பெரிய ஓப்பனிங் கிடைத்துள்ளது, முதல் நாளே ரூ 2 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது. விக்ரம் வேத மட்டும் இல்லனா இன்னும் நல்ல கோடிகளை அள்ளி இருக்குமாம்..

தற்போது 4 நாள் முடிவில் இப்படம் ரூ 8 கோடி வரை வசூல் செய்துவிட்டதாக கூறுகின்றனர். அதுவும் நல்ல விமர்சனங்கள் வருவதால் இன்னும் பல கோடிகளை அள்ளுமாம்.

இதன் மூலம் மீசைய முறுக்கு ஏற்கனவே லாபத்தை பெற்றுவிட்டதாக தெரிகின்றது. அதுவும் இல்லாமல் ஒரு சினிமாவில் ஒருவரை வைத்து வெற்றி படம் குடுக்க முடியும் என்று நிரூபித்தால் அனைவரும் லாபம் எடுக்க ஆசைபடுவார்கள். அப்படிதான் சுந்தர்.சி அவரை வைத்து மறுபடியும் படம் எடுப்பார் என்று கூறுகிறார்கள்.