Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரபல நடிகருடன் காதலில் விழுந்து ஏமாந்து விட்டேன்.. புலம்பும் அய்யனார் பட நடிகை மீரா நந்தன்
தமிழ் ரசிகர்களுக்கு தமிழ் நடிகைகளை விட பெரும்பாலும் மலையாள நடிகைகளை மிகவும் பிடிக்கும் என்பது பல மலையாள நடிகைகள் தமிழ் சினிமாவில் ஆட்சி நடத்தியதை வைத்துப் புரிந்து கொள்ளலாம்.
அதேபோல் மலையாள நடிகைகள் அனைவரையும் தமிழ் ரசிகர்கள் ஆதரிக்கவில்லை. அந்த வகையில் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்காமல் தடுமாறிய மலையாள நடிகைகளில் ஒருவர் மீரா நந்தன்.
வால்மீகி என்ற தமிழ் படத்தில் மூலம் அறிமுகமான மீரா நந்தன் அதன்பிறகு நடிகர் ஆதியுடன் அய்யனார் என்ற படத்தில் நடித்தார். அந்த படமும் பெரிய அளவு ரசிகர்களை கவரவில்லை.
பின்னர் மலையாள சினிமாவில் தொடர்ந்தது கவனம் செலுத்தி வந்த மீரா நந்தன் 2015ஆம் ஆண்டு சரத்குமார் நடிப்பில் வெளியான சண்டமாருதம் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்தார். ஆனால் வந்த வேகத்திலேயே திருப்பி அனுப்பிவிட்டார்கள்.
கடந்த சில வருடங்களாக எந்த ஒரு படத்திலும் நடிக்காமல் மன அழுத்தத்தில் இருந்தாராம் மீரா நந்தன். அதற்கு காரணம் உருகி உருகி காதலித்த பிரபல நடிகர் ஒருவர் தன்னை ஏமாற்றியதுதான் என கூறியுள்ளார்.
ஆனால் யார் அந்த நடிகர் என்பதை மட்டும் சொல்லாமல் மறுத்துவிட்டார்.
பெரும்பாலும் மலையாள சினிமாவில் அதிக படங்களில் நடித்ததால் மலையாள நடிகருடன் நெருக்கம் ஏற்பட்டிருக்கலாம் என கோலிவுட் வட்டாரங்களில் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இந்நிலையில் தற்போது தான் அந்த காதல் தோல்வியில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வந்து தன்னுடைய சினிமா கேரியரில் கவனம் செலுத்த உள்ளதாக மீரா நந்தன் தெரிவித்துள்ளார்.

meera-nandan-cinemapettai
