Tamil Cinema News | சினிமா செய்திகள்
சனம் ஷெட்டி மீது கொலைப்பழியை அசால்டாக போட்ட பிரபலம்.. சர்ச்சையால் ஷாக்கான ரசிகர்கள்!
தற்போது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். அவர்களுள் ஒருவர்தான் மாடல் அழகி சனம் ஷெட்டி.
இவரைப் பற்றி சர்ச்சைக்குரிய நாயகி மீரா மிதுன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகீர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “தற்போது பிக் பாஸ் வீட்டில் டுபாக்கூர் ஒன்று பங்கேற்றுள்ளது, உண்மையில் அவள் ஒரு கொலைகாரி, ஏனென்றால் அவளுடன் தொடர்பு வைத்திருந்த ஒரே காரணத்தினால் சனம் ஷெட்டியின் முதல் திரைப்படமான ‘அம்புலி’ படத்தின் ஹீரோ தற்கொலை செய்து கொண்டார்.
ஆனால் அந்தக் கொலை வழக்கில் ஈஸியா தப்புசிட்டா.. நல்லவேளை அதுக்கப்புறம் என்னோட பிக்பாஸ் சீசன் 3ல் பங்கேற்ற தர்ஷனை காலி செய்ய சனம் போட்ட பிளான, தர்ஷனுக்கு நான்தான் பிக்பாஸ் வீட்டிலேயே சனம் ஷெட்டியை பற்றிய உண்மைகளை உடைத்து சொன்னேன். அதுக்கப்புறம் தான் அவள தர்ஷன் கழட்டிவிட்டான்.
மேலும் இப்ப நடக்கிற பிக் பாஸ் சீசன்4ல், கலந்துகொள்கிற சனம் ஷெட்டி, வீட்டில் இருக்கும் பெரிய மனுஷன்னு கூட பார்க்காம சுரேஷ் சக்கரவர்த்தியை ‘போடா வாடா’ன்னு சொல்றது ரொம்ப தப்பா இருக்குது.
இருப்பினும் சுரேஷ் சக்கரவர்த்திக்கு தான் என்னோட ஃபுல் சப்போர்ட்” என்று சனம் ஷெட்டியின் மீது கொலைப்பழியை அசால்டா தூக்கி போட்டாங்க மீரா மிதுன்.
ஏற்கனவே வாய வச்சுகிட்டு எல்லாரையும் வம்புக்கு இழுக்கும் மீராமிதுன் தற்போது மீண்டும் சனம் செட்டியை பற்றி பகிரங்க குற்றச்சாட்டை சுமத்தி இருப்பது சமூக வலைதளங்களில் நெட்டிசன்களால் பேசும் பொருளாக மாறிடுச்சு.

meera-mithun-viral-twit
இருப்பினும் ரசிகர்களின் தரப்பிலிருந்து சனம் ஷெட்டி மீது தப்பு இருக்கா? இல்லையா? என்பதையெல்லாம் ஆராய கொஞ்சம் கூட யோசிக்கல, ஏன்னா ரெண்டு பேரும் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்பதால்தான் இந்த செய்தியையும் சுலபமாக கைகழுவி விட்டானர்.

meera-mithun-viral-twit
