Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீரா மிதுனின் வருங்கால கணவர் இவர் தானாம்.. யார் அந்த அதிர்ஷ்டசாலி?
பப்ளிசிட்டிக்காக ஒரு மனுஷன் எதையெல்லாம் செய்யக் கூடாதோ அது எல்லாத்தையும் செஞ்சு அதுல பேர்போனவங்கதான் சர்ச்சை நாயகி மீரா மிதுன்.
மீரா பிக்பாஸ் 3 நிகழ்ச்சியை முடித்த கையோடு கோலிவுட்டிலும் மாபியா இருக்கிறது என்றும் வாரிசுகளுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படுகிறது என்றும் கோலிவுட்டை கிழித்து விட்டு மும்பையில் போய் செட்டில் ஆகி உள்ளார்.
இனிமேல் ஹாலிவுட் மற்றும் பாலிவுட் படங்களில் மட்டும்தான் கவனம் செலுத்தப் போவதாகவும் தெரிவித்து வருகிறார் நடிகை மீரா மிதுன். மீரா தமிழக திரையுலகின் மிகப் பெரிய புள்ளிகளாக விளங்கும் விஜய், ரஜினி, கமல், சூர்யா போன்ற பிரபலங்களை தேவையில்லாத வார்த்தைகளால் பேசி அவர்களுடைய ரசிகர்களின் கடும் கோபத்திற்கு உள்ளாகி இருக்கிறார்.
தற்போது திடீரென ஒரு வாலிபருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை டிவிட்டரில் பதிவிட்டு Couple Goals, challenge accepted என்ற கேப்ஷன்ஸ் வழங்கியுள்ளார்.
இந்த ட்வீட்டை பார்த்த பலர் ‘இந்தப் பையன தான் கல்யாணம் பண்ணிக்க போறீங்களா? ரொம்ப சின்ன பையனா இருக்கான் விட்ருங்க பாவம்!’ என்றும், ‘சின்னப்பையன் வாழ்க்கையில விளையாடாதீங்க’ என்றும் மாறி மாறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.
மேலும் நடிகை மீரா மிதுன், தனக்கு கடந்த ஜூன் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது என்றும் வருங்கால கணவரைப் பற்றி எதையும் கூற விரும்பவில்லை என்றும் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

meera-mithun-1
