உனக்காக நானுருக்கேன் முகென்.. டுவிட் போட்ட மீரா மிதுனை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்

சென்னை: தந்தையை இழந்த முகெனுக்காக உருகிய மீரா மிதுனை நெட்டிசன்கள் தொடர்ந்து கழுவி ஊற்றி வருகிறார்கள்.

மலேசியாவை சேர்ந்த தமிழர் முகென். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவர் தான் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் டைட்டில் வின்னர். இவரது தந்தை பிரகாஷ் ராவ் நேற்று முன்தினம் திடீரென மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்தது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகெனுடன் பங்கேற்ற சேரன், வனிதா விஜயகுமார் உள்ளிட்ட பலர் முகென் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்கள். ரசிகர்கள் பலரும் சமூக வலைதளங்களில் முகெனுக்கு ஆறுதல் கூறும் வகையில் அவரது தந்தையின் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்தனர். பிரகாஷ் ராவின் இறுதிச்சடங்கு நேற்று மாலை மலேசியாவில் நடந்தது.

இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று பெரும் சர்ச்சைகளையும் சண்டைகளையும் உருவாக்கிய நடிகை மீரா மிதுன், தந்தையை இழந்து தவிக்கும் முகெனுக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். அவர் தனது பதிவில், தைரியமாக இரு முகென். ஆன்மிக காரணங்களுக்காக தான் எல்லாமே நடக்கிறது.

நான் எப்போதும் உங்களுக்காக இருக்கிறேன். எப்போது வேண்டுமானாலும் என்னை கூப்பிடுங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காகவே பிறந்தவர் என்று தெரிவித்து இருந்தார். அத்துடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முகெனுடன் சேர்ந்து எடுத்த போட்டோவையும் தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் மீரா மிதுன்.

இதனால் ஆத்திரம் அடைந்த நெட்டிசன்ஸ் ஏன் கன்டென்ட் எதுவும் கிடைக்கவில்லையா, முகென் தந்தை இறந்த விஷயத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

சிலர் ‘கால் மி எனிடைம்ன்னா என்ன அர்த்தம்’ என்றும் டபுள் மீனிங்கில் கலாய்த்திருக்கின்றனர். டிவிட்டர் ஹேன்டில் நம்பர் கொடுங்க சிலர் நீங்கள் முகெனின் தவறான டிவிட்டர் ஹேன்டிலை குறிப்பிட்டுள்ளீர்கள் என்று சரியான டிவிட்டர் ஐடியை கொடுங்க என்று கூறியுள்ளனர்.

Leave a Comment