Tamil Cinema News | சினிமா செய்திகள்
மீரா மிதுனை துரத்தி துரத்தி காதலித்த விஷால்.. பொண்ணு கேட்டு அடம்பிடித்த ஆடியோவை வெளியிட்ட நடிகை!
தமிழ்நாட்டின் தற்போதைய விடிவெள்ளி என்றால் அது மீராமிதுன் தான். இவருடைய செய்தி இல்லாமல் இந்த நாள் தொடங்காது என்பதை போல ஒவ்வொரு நாளும் பரபரப்பை கிளப்பி வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய், சூர்யா, ரஜினி, கமல் மற்றும் முன்னணி நடிகைகளான நயன்தாரா, திரிஷா போன்றவற்றை நேரடியாக தனது டிவிட்டர் பக்கத்தின் மூலம் வம்புக்கு இழுத்தார்.
இதற்காக ரசிகர்களுடன் தினமும் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சூர்யாவுக்கு நடிப்பு வரவில்லை என்றும், தளபதி விஜய் ரசிகர்களை வைத்து மாபியா செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
என்னடா இன்னும் முக்கியமான ஆள் பற்றி எந்தப் பயிற்சியும் வெளி வரவில்லையே என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் அந்த நடிகரைப் பற்றி பரபரப்புச் செய்தியை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன்.
நடிகர் விஷால் மீரா மிதுனை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டாராம். அதன் காரணமாக அவ்வப்போது மீராமிதுன் அம்மாவுக்கு விஷால் போன் பண்ணி பேசி உள்ளார். கட்டுனா உன்ன தான் கட்டுவேன் எனும் அளவுக்கு காதலித்து வந்தாராம்.
ஆனால் மீராமிதுன் தான் தனக்கு இப்போதைக்கு விருப்பம் இல்லை எனக் கூறி ஒதுக்கி விட்டதாக ஒரு ஆடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
