சினிமாவில் ஒரு நடிகை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக பல நடிகைகள் இருக்கின்றனர். ஆனால் ஒரு நடிகை எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரே ஒருவர் நடிகை மீரா மிதுன். ஒன்றிரண்டு படத்தில் தலையை காட்டிவிட்டு இவர் கொடுக்கும் அலப்பறை ரொம்ப அதிகம்.
தன்னைத்தானே சூப்பர் மாடல் என்று சொல்லிக்கொள்ளும் இவருக்கு மனதில் நீ ஒரு உலக அழகி என்ற நினைப்பை யாரோ விதைத்திருக்கிறார்கள். அதனால் சினிமாவில் இருக்கும் நடிகைகள் அனைவரும் இவரை பார்த்து தான் உடை அணிகிறார்கள், மேக்கப் செய்கிறார்கள் என்று அடிக்கடி சமூக வலைத்தளங்களில் உளறிக் கொட்டி வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் பட்டியலினத்தவர்களை பற்றி தவறாக பேசி பிரச்சனையிலும் மாட்டிக் கொண்டார். அதோடு சினிமாவில் இருக்கும் பிரபல நடிகர், நடிகைகளை பற்றிய அவதூறு கருத்துக்களை பரப்புவது போன்ற தேவையில்லாத விஷயங்களை செய்ததால் இவர் காவல்துறையால் கைது செய்யப்பட்டு பின்னர் ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்தார்.
அதற்குப் பிறகாவது அடங்கி இருப்பார் என்று பார்த்தால் அதன் பிறகுதான் அவர் ஆட்டமும், அட்டூழியம் அதிகம் ஆனது. அரைகுறை ஆடையில் பாத்ரூமில் குளிக்கும் வீடியோ, ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோ என்று பல வீடியோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வந்தார்.
இதையெல்லாம் பார்த்த நெட்டிசன்கள் இவருக்கு பைத்தியம் பிடித்து விட்டது என்று வெளிப்படையாகவே கூறிவந்தனர். அதை நிரூபிக்கும் விதமாக மீராமிதுன் நான் எங்கு சென்றாலும் எல்லோரும் என்னை சைட் அடிக்கிறார்கள் அழகா பொறந்தது என் தப்பா என்றெல்லாம் உளறி சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார்.
இதனால் கொந்தளித்த பலரும் அவரை கண்டபடி விமர்சித்து கருத்துக்கள் பதிவிட்டு வந்தனர். இதைப்பார்த்த மீராமிதுன் என் அழகைப்பார்த்து எல்லாருக்கும் பொறாமை என்று புது குண்டைத் தூக்கிப் போட்டார். இப்படி சைக்கோ போல் அருவருப்பான செயல்களை செய்து வரும் இவரால் சினிமா துறையில் இருக்கும் பலருக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டுள்ளது.
இதனால் நடிகைகள் பலரும் நீ எல்லாம் ஒரு நடிகையா உன்னால் எங்களுக்குத் தான் அசிங்கம் என்று இவர் மீது கடும் கோபத்தில் இருக்கின்றனர். ஆனாலும் அடங்காத மீரா மிதுன் வழக்கம் போல தன்னைத் தானே பெருமை பேசிக்கொண்டு சைக்கோவாக மாறி இருக்கிறார்.