Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஓவரா ஆட்டம் போட்ட மீரா மிதுன்.. பொடனியில் அடித்து இழுத்துச் செல்ல ரெடியான போலீஸ்! கஞ்சி காய்ச்சிடுவாங்க கண்ணு!
2016 ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா அழகிப் போட்டியில் வென்றவர் மீரா மிதுன்(meera mithun). மேலும் இவர் மிஸ் குயின் ஆஃப் இந்தியா 2016 பட்டத்தையும் பெற்றுள்ளார். இவர் சினிமாவில் சில படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன்-3 மூலம் தமிழ் மக்களால் அடையாளம் காணப்பட்டார்.
பிரபல மாடல் அழகியான இவர் பல்வேறு மாடல் அழகிகளை போட்டிக்கு அழைத்து செல்வதாக கூறி ஏமாற்றியதாய் சர்ச்சையில் சிக்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் அவர் தங்கியிருந்தாலும் இயக்குனர் சேரனயே சிண்டி பெரும் சர்ச்சையை கிளப்பினார் மீரா.
கமலஹாசன் முதல் விஜய், சூர்யா, ஜோதிகா என திரைத்துறையில் சாதித்த அனைத்து பிரபலங்களையும் கொச்சைப்படுத்தும் விதமாக தகாத வார்த்தைகளால் பேசி வீடியோக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வந்தார். இதை சற்றும் கண்டுகொள்ளாமல் பிரபலங்கள் அனைவரும் அவர்களுடைய வேலையை பார்த்தனர்.
மேலும் சூர்யாவோ “எதிர்மறை எண்ணங்களை விலக்கி வைப்பதே நல்லது. எதிர்மறை எண்ணத்தை தவிர்த்து நேர்மறையான எண்ணத்தில் உங்களது நேரத்தை செலவிடுங்கள்” என்று தனது ரசிகர்களிடம் கூறி அவர்களை நிதானபடுத்தினார். இவ்வாறு பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி தமிழ்மக்களிடையே பப்ளிசிட்டி பெற்றுவந்த மீராமிதுன் சற்று காலம் அடங்கி இருந்தார்.
மீரா மிதுன் சில மாதங்களுக்கு முன்பு ட்விட்டரில் மலையாளிகளை பற்றி மோசமாக பேசியிருந்தார். மேலும் அவர்களின் மீது தவறான கொச்சை சொற்களை பயன்படுத்தி இருந்தார். இவ்வாறு பேசி மீராமிதுன் தனக்கு சூனியம் வைத்துக் கொண்டார் என்றே கூறலாம்.
இந்த வீடியோவின் அடிப்படையில் கேரளாவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மீரா மிதுனுக்கு எதிராக ஜாமீன் பெறாத கைது வாரன்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் மீராமிதுன் கைது செய்யப்பட்டு கேரளாவுக்கு கொண்டு செல்லபடலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது.
இந்த எஃப்ஐஆர் தொடர்பாக இடுக்கி காவல் நிலையத்தின் துணை ஆய்வாளர் பிஜூ ஜேக்கப்பை கேட்டபோது, பிராந்தியத்தில் ஒரு முக்கிய பெண் வழக்கறிஞர்கள் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார். இந்த வழக்கு முதலில் நீதிமன்றத்துக்கு சென்றதாகவும் அங்கிருந்து தோடபுழா காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டதாகவும் தகவல்கள் தெரியவருகின்றன. இதற்கான விசாரணையும் தொடங்கப்பட்டுவிட்டதாம்.
தமிழ்நாட்டில் ஆட்டம் காட்டிக்கொண்டிருந்த மீரா மிதுன், கேரளா போலீசாரின் கழுகுப் பார்வையில் சிக்கியுள்ளார். கூடிய விரைவில் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி, மீரா மிதுன் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
