Tamil Cinema News | சினிமா செய்திகள்
ரஜினியை அந்த மாதிரி சீண்டி வம்புக்கு இழுத்த மீரா மிதுன்.. உங்களுக்கு நேரம் சரி இல்லை மேடம்!
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் ரஜினிகாந்த். சமீபத்தில்தான் தனது 45 வருட சினிமா வாழ்க்கையை தனது ரசிகர்களுடன் சேர்ந்து சமூக வலைதளங்களில் கொண்டாடினார்.
இதற்காக ரசிகர்களுக்கு நன்றியும் தெரிவித்தார். கிட்டத்தட்ட 45 வருடமாக தமிழ் சினிமாவை தன் தோளில் சுமந்துள்ள நாயகனாக வலம் வருகிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
ரஜினிகாந்த் தற்போது சினிமாவில் ஆர்வமாக நடித்து வந்தாலும் அரசியல் கட்சியைத் தொடங்குவதில் தாமதம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் அவர் அரசியல் கொள்கைகளில் இன்னும் நிலைபாட்டில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
கடந்த வருடம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடப் போவதாக அதிரடியாக ஒரு பேட்டியை கொடுத்தார். ஆனால் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் குறைந்த நாட்களே இருக்கும் நிலையில் அதற்கான வேலைகள் நடந்த மாதிரியே தெரியவில்லை.
ஏற்கனவே சூர்யா விஜய் போன்ற வரை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அசிங்கமாக பேசி வந்த மீராமிதுன் தற்போது ரஜினி பக்கம் வந்துள்ளார். இது விஜய் ரசிகர்களை மட்டுமின்றி ரஜினி ரசிகர்களையும் கோபப்படுத்தி உள்ளது.
ரஜினிகாந்த் சினிமாவில் தனியாக போராடி வெற்றி பெற்றதற்கு என்னுடைய வாழ்த்துக்கள் என்று கூறி, தமிழர்களே ஆள வேண்டும் என்ற உங்கள் கனவு நிறைவேறாது எனவும், அரசியலை விட்டு விலகி சென்று விடுங்கள் என கூறியுள்ளார்.

meera-mithun-tweet-about-rajini
எனக்கென்னமோ இது சரியா படலை!
