Tamil Cinema News | சினிமா செய்திகள்
சிவகார்த்திகேயனை அசிங்கப்படுத்திய மீரா மிதுன்.. அடித்து ஓடவிட்ட ரசிகர்கள்
பிக் பாஸ் 3 சீசனில் பதினாறு போட்டியாளர்கள் ஒருவராக கலந்து கொண்டவர் மீரா மிதுன். சர்ச்சைகளில் அடிக்கடி சிக்குவதால் இவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது. ஆனால் பிக்பாஸ் வீட்டினுள் சேரன் தன்னை தவறான இடத்தில் கை வைத்தார் என்றுகூறி அசிங்கப்பட்டு மக்களால் வெளியேற்றப்பட்டார்.
அதுமட்டுமல்லாமல் மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற இவர், அழகி போட்டி நடத்துவதாக கூறி பல மாடலிங் பெண்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளார். பத்தாததுக்கு இவருடைய மேனேஜரை கொலை செய்வதாக கூறிய ஆடியோ வெளியே வந்து பெரும் சர்ச்சையை கிளப்பியது.
இந்நிலையில் சிவகார்த்திகேயனை பற்றி அவதூராக பேசி மீண்டும் மீண்டும் சர்ச்சையில் மாட்டிக் கொண்டுள்ளார். அதாவது பிக்பாஸ் வீட்டினுள் இவர் செல்வதற்குமுன் நம்ம வீட்டுப் பிள்ளை திரைப்படத்தில் ஒரு காட்சியில் நடித்தும், ஒரு பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு சென்றுள்ளதாக கூறினார்.
ஆனால் அதனை படத்தில் இருந்து நீக்கி விட்டனர். ஏன் என்று கேட்ட போது நீங்கள் விஜய் டிவிக்கு சென்றதால் அவ்வாறு செய்தோம் என்று தயாரிப்பாளர் தரப்பு கூறியுள்ளது. அதற்கு மீரா மிதுன், சிவகார்த்திகேயனும் விஜய் டிவியில் இருந்து வந்தவர் தானே என்றுகூறி ஆதங்கப்பட்டு பாண்டியராஜ் மற்றும் தயாரிப்பாளர் தரப்பை விமர்சனம் செய்து வருகிறார்.
நீ வாங்குற பத்து அஞ்சு பிச்சைக்கு இதெல்லாம் தேவைதானா!! என்கிறது ஒரு தரப்பு.
