fbpx
Connect with us

Cinemapettai

எஸ்ஜே சூர்யா நடிகையின் தந்தைக்கு கத்தி முனையில் நடந்த கொடுமை.. அதுவும் பட்ட பகலில் இரண்டு பேர்

India | இந்தியா

எஸ்ஜே சூர்யா நடிகையின் தந்தைக்கு கத்தி முனையில் நடந்த கொடுமை.. அதுவும் பட்ட பகலில் இரண்டு பேர்

எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளிவந்த அன்பே ஆருயிரே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மீரா சோப்ரா. இவரது தந்தை டெல்லியில் உள்ள போலீஸ் காலனியில் நடைப்பயிற்சி மேற்கொண்டபோது 2 மர்ம நபர்கள் வழிமறித்து கத்தியை காண்பித்து செல்போனை திருடி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, டெல்லி போலீசுக்கு இதற்கான தகவலை கொடுத்து உள்ளார், அவர்களும் உடனடியாக தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

meera-chopra-delhi-cinemapettai

meera-chopra-delhi-cinemapettai

அவர் அளித்த புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இந்த வேகமான நடவடிக்கைக்கு டெல்லி போலீசுக்கு நன்றி தெரிவித்துள்ளார் மீரா சோப்ரா.

இது ஒருபுறமிருக்க போலீஸ் காலணிலேயை இதுபோன்ற சம்பவம் நடந்திருப்பதால் தனக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால் காவல்துறையினர் வயதானவர்கள் மற்றும் பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவர் பிரபல நடிகையான பிரியங்கா சோப்ராவின் நெருங்கிய உறவினர் என்பது குறிப்பிடத்தக்கது தமிழ்சினிமாவில் கடைசியாக 2015ஆம் ஆண்டு இசை,கில்லாடி ஆகிய படங்களில் நடித்துள்ளார், பின்னர் எந்த வாய்ப்பும் கிட்டவில்லை.

Continue Reading
To Top