வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

விஜயா செய்த காரியத்தால் ஜெயிலுக்கு போகும் மீனாவின் அம்மா.. சிட்டியுடன் அடுத்த பிளானுக்கு தயாரான ரோகினி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஏற்கனவே விஜயாவுக்கு முத்து மற்றும் மீனா வீட்டில் இருப்பது பிடிக்கவில்லை. அவர்களை எப்படியாவது பிளான் பண்ணி வெளியே அனுப்ப வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைந்தார். அந்த வகையில் தற்போது மீனாவின் தம்பி திருடிய வீடியோ வெளியானதால் அதை பார்த்த விஜயா, நேரா மீனாவின் வீட்டிற்கு போய் அங்கே இருப்பவர்களை அசிங்கப்படுத்தி சத்யாவை அடித்து அவமானப்படுத்தி விட்டார்.

அத்துடன் வீட்டிற்கு வந்த மீனாவையும் வெளியே போக சொல்லி ருத்ர தாண்டவம் ஆடிவிட்டார். ஆனால் அண்ணாமலை, சத்யா செய்த தவறுக்கு அவன் மீது போலீஸ் கேஸ் கொடுத்து விட்டாய். அதோடு நிறுத்திக்கோ, எந்த தப்புமே பண்ணாத மீனா ஏன் வெளியே போக வேண்டும் என்ற கேள்வி கேட்டதால் கோபப்பட்ட விஜயா, அப்படி என்றால் நான் வெளியே போகிறேன் என்று தோழி பார்வதி வீட்டிற்கு விஜயா போய்விட்டார்.

அங்கே போனதும் நடந்த விஷயத்தை பார்வதியிடம் சொல்கிறார். அதற்கு பார்வதி, விஜயாவுக்கு அட்வைஸ் கொடுக்கும் விதமாக மீனாவை வெளியே போகச் சொன்னது தப்புதான். ஏனென்றால் சுருதி மற்றும் ரோகினி பணக்கார வீட்டு பெண்ணாக இருந்தாலும் அவர்களை நம்பாதே. ஆனால் மீனா அப்படிப்பட்ட மருமகள் உனக்கு கிடையாது. அதனால் தேவை இல்லாமல் மீனாவை ஒதுக்கனும் என்று நினைக்காதே என அட்வைஸ் பண்ணுகிறார்.

ஆனாலும் விஜயா, காது கொடுத்து கேட்காமல் நான் உனக்கு இங்கே இருப்பது பிடிக்கவில்லை என்றால் சொல்லு நான் எங்க அம்மா வீட்டுக்கு போகிறேன் என்று சொல்கிறார். உடனே பார்வதி அப்படி எல்லாம் இல்லை நீ யார் சொன்னாலும் கேட்கமாட்டாய். பேசாமல் இங்கே இரு என்று சொல்லிவிடுகிறார். பிறகு மீனா, விஜயா வெளியே போனதை நினைத்து அழுது முத்துமிடம் பீல் பண்ணி பேசுகிறார்.

முத்து சமாதானப்படுத்தும் பொழுது மீனா நாம் இருவரும் தனியாக போய் விடலாமா என்று கேட்கிறார். அதற்கு கோபப்பட்ட முத்து, என் அப்பா இங்கே இருக்கும் வரை நாம் வெளியே போகக்கூடாது. என் அப்பாவுக்காக நாம் இங்கு தான் இருக்கணும் என்று சொல்லிவிட்டார். அடுத்ததாக ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு வந்து வழக்கம் போல் நாரதர் வேலையை பார்த்து கலகத்தை ஏற்படுத்தலாம் என்று நினைத்தார்.

ஆனால் சுருதி, அம்மாவுக்கு சரியான பதிலடி கொடுக்கும் விதமாக இது உன்னுடைய பிரச்சினை கிடையாது. தேவை இல்லாமல் இதில் தலையிட வேண்டாம் என்று சொல்லிவிட்டார். இதற்கு இடையில் சுருதி அம்மா வந்ததும் ரோகிணி, விஜயா கோவிச்சுட்டு போன விஷயத்தை உலறிவிடுகிறார். இதை பார்த்த அண்ணாமலை, ரோகினியை கூப்பிட்டு வீட்டில் நடந்த விஷயத்தை எல்லாரிடமும் சொல்ல தேவையில்லை.

அதனால் கொஞ்சம் பார்த்து பேசு என்று சொல்கிறார். அப்பொழுது ரோகினிக்கு சிட்டி இடம் இருந்து போன் வருகிறது. உடனே சந்தோஷத்தில் ரோகினி, சிட்டியை பார்ப்பதற்காக கிளம்பி விட்டார். இன்னும் இந்த இரண்டு சதிக் கும்பல்களும் சேர்ந்து அடுத்த தில்லாலங்கடி வேலைகளை பண்ணுவதற்கு தயாராகி விட்டார்கள். அடுத்ததாக மீனாவிற்கு சீதா போன் பண்ணி அம்மா போலீஸ் ஸ்டேஷனில் இருக்கிறார் என்ற தகவலை கொடுக்கிறார்.

இதை கேட்டதும் மீனா அழுது ஆர்ப்பாட்டம் பணி முத்துவை கூட்டிட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு போகிறார். அங்கே முத்து எதற்காக இவங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு வந்து இருக்கீங்க என்று கேட்கிறார். அதற்கு உன் மச்சான் எங்கு இருக்கிறார் என்று தெரியவில்லை. அவர் வரும்வரை இவங்க இங்கதான் இருப்பாங்க என்று சொல்கிறார். அதற்கு அப்படி ஏதும் சட்டம் இல்லையே என்று முத்து கேட்கும் பொழுது உங்க அம்மா சத்யா மீது மட்டுமில்லாமல் குடும்பத்தின் மீதும் தான் புகார் கொடுத்து இருக்கிறார்கள் என்று சொல்கிறார்.

அதன்படி சத்யா வரவில்லை என்றால் கோர்ட்டில் சத்யாவின் அம்மாவை கூட்டிட்டு போய் நிறுத்துவோம். அந்த வகையில் சத்யாவிற்கு பதில் இவங்க தான் ஜெயிலுக்கு போவாங்க என்று சொல்கிறார். இதை கேட்டதும் சீதா மற்றும் மீனா அழுகிறார்கள். இவ்ளோ விஷயம் நடந்தும் முத்து மற்றும் மீனாவால் எதுவும் பண்ண முடியாமல் டம்மியாகத்தான் இருக்கிறார்கள். தொடர்ந்து ரோகிணி ஜெயித்துக் கொண்டே வருகிறார்.

- Advertisement -

Trending News