Sirkadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், ஒரு பக்கம் வீட்டு வேலைக்காரி ஆகவும் இன்னொரு பக்கம் ஏமாந்த மக்காகவும் தான் இத்தனை நாளாக மீனா இருந்து வந்தார். ஆனால் பொறுத்தது போதும் இனி பொங்கனும் என்று முடிவுக்கு வந்த நிலையில் நம்மளை ஏமாற்ற நினைப்பவர்களுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்றால் நாம் அவர்கள் வழியில் போய் ஏமாற்ற வேண்டும் என்று முடிவு பண்ணி விட்டார்.
அந்த வகையில் பணம் கொடுக்காமலேயே நம்மை முட்டாளாக்கி ஏமாத்துன சிந்தாமணி, மேனேஜர் மற்றும் மாமியாருக்கு பதிலடி கொடுப்பதற்கு சீதா மற்றும் சுருதியுடன் கூட்டணி போடப் போகிறார். முத்துவுக்கு தெரிந்தால் இந்த பிரச்சனை பெருசாக வெடிக்கும் என்பதால் முத்துவுக்கு தெரியாமலேயே இவர்கள் மூவரும் செய்ய போவது சம்பவமாக இருக்கப் போகிறது.
இந்த சம்பவத்தில் நிச்சயம் சிந்தாமணி சிக்கியது மட்டும் இல்லாமல் மீனா புயலாக மாறிய வெறித்தனத்தை பார்த்து விஜயா மிரண்டு போய் மீனா பக்கத்தில் நெருக கூட வருவதற்கு பயப்படும் மாதிரி சம்பவம் செய்யப் போகிறார். சிந்தாமணி இனி தொடர்ந்து பூ பிசினஸிலும் சரி, டெக்கரேஷனையும் பண்ண முடியாத அளவிற்கு தான் ஆப்பு இருக்கப் போகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த டார்கெட் ரோகிணி தான் என்பதற்கு ஏற்ப க்ரிஷ் பற்றிய விஷயங்களை கண்டறியும் விதமாக க்ரிஷ் அம்மா அப்பா யார் என்பதை மும்பரமாக தேடும் பணியில் மீனா முழுமையாக இறங்கப் போகிறார். இதில் நிச்சயம் மீனா வெற்றி பெறுவார் என்பதற்கு ஏற்ப மீனா கையில் ரோகினி சிக்கப் போகிறார்.