Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் சேதுபதியை பார்த்து கெட்டுப்போன மீனா.. அது மட்டுமே பண்ணாதீங்க ப்ளீஸ்

meena-vijay-sethupathi

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கனவு தேவதையாக வலம் வந்தவர் தான் மீனா. இவரது கண்ணழகில் சொக்கிப் போகாத நடிகர்களும் கிடையாது, ரசிகர்களும் கிடையாது. அந்தளவுக்கு அழகு ராணியாக வலம் வந்தார்.

என்னதான் பெரிய நடிகையாக இருந்தாலும் ஒரு கட்டத்தில் அவர்களது மார்க்கெட் டல் அடிக்க ஆரம்பித்துவிடும். அந்த நேரத்தில் சரியாக திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.

அதையேதான் மீனாவும் செய்தார். மீனா கடந்த 2009 ஆம் ஆண்டு வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். தற்போது அவருக்கு நைனிகா என்ற மகள் உள்ளார். அவரும் விஜய்யின் தெறி படத்தில் நடித்துள்ளார்.

சினிமாவை விட்டு கொஞ்சம் விலகி இருந்த மீனா தற்போது மீண்டும் சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் மீண்டும் தென்னிந்திய சினிமாவில் விறுவிறுப்பாக நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

சினிமாவுக்கு வந்த 40 வருடங்களை கொண்டாடிய மீனா சமீபத்தில் விஜய் சேதுபதியிடம் இருந்து ஒன்று கற்றுக்கொண்டதாக குறிப்பிட்டுள்ளார். விஜய் சேதுபதியை போல அனைத்து விதமான கதாபாத்திரங்களில் நடிக்க ஆசையாக இருக்கிறதாம்.

இதனால் வில்லி கதாபாத்திரத்தில் நடிக்கவும் அதிகம் ஆர்வம் கொண்டிருப்பதாக கூறியுள்ளார் மீனா. பார்க்க இன்னமும் பச்சை குழந்தை போல் இருக்கும் மீனா வில்லி கதாபாத்திரத்தில் நடித்தால் செட் ஆகாது என கோலிவுட்டில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

meena-cinemapettai

meena-cinemapettai

Continue Reading
To Top