செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 10, 2024

விஜயா போடும் டிராமாவில் மாட்டிக்கொள்ள போகும் மீனா.. பார்வதி சொல்லப்போகும் உண்மை, சிக்கித் தவிக்கும் ரோகிணி

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளை என்பதற்கு ஏற்ப மனோஜ் ஒட்டுமொத்த குடும்பத்திடமும் மாட்டிக் கொண்டதால் எஸ்கேப் ஆகுவதற்கு வேறு வழி இல்லாமல் சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக மீனா, ரோகிணியை பார்த்து உங்களுக்கு இந்த விஷயம் தெரியுமா என்று கேட்கிறார்.

ஆமாம் தெரியும் என்று ரோகினி சொன்ன நிலையில் அப்பொழுது நீங்களாவது எங்களிடம் சொல்லி இருக்கலாமே என்று எல்லோரும் கேட்கிறார்கள். ஆனால் அதற்கு ரோகினி இடம் பதில் இல்லாததால் ஷூட்டிங் முடிந்ததற்கு பிறகு பணம் கொடுக்கலாம் என்று நினைத்தோம் என ரெண்டு பிராடுகளும் சேர்ந்து ஒரே மாதிரி பதில் சொல்லிவிட்டார்கள். இதையெல்லாம் கேட்டு கடுப்பான முத்து, எப்படியும் போய் தொலைங்க எங்களுக்கு கொடுக்க வேண்டிய பணத்தை இப்பொழுதே அனுப்பி வையுங்கள் என்று சொல்கிறார்.

உடனே மனோஜ் போனிலிருந்து ரோகினி அனைவருக்கும் சேர வேண்டிய பணத்தை அனுப்பி விடுகிறார். அப்பொழுது ஒவ்வொருவரும் அவர்களுடைய போனில் வரும் மெசேஜை பார்த்து பணம் வந்துவிட்டது என்று உறுதி செய்து விடுகிறார்கள். அப்பொழுது ரவி, அம்மா போனை எடுத்து பார்க்கும் பொழுது 15,000 ரூபா தான் வந்திருக்கிறது. மீதம் பத்தாயிரம் ரூபாய் எங்கே என்று கேட்கிறார்.

அதற்கு அண்ணாமலை, உன் மகன் கம்மியாக கொடுத்தால் வாங்க கூடாது என்று சொல்கிறார். உடனே மனோஜ் நான் அம்மாவிடம் நேற்று இரவே பணம் கொடுத்து விட்டேன் என்று சொல்லிவிடுகிறார். உடனே அண்ணாமலை, விஜயாவிடம் நீ ஏன் எதுவும் சொல்லவில்லை என்று கேட்கிறார். அதற்கு விஜயா ஷூட்டிங் முடித்துவிட்டு சொல்லலாம் என்று இருந்தேன் என சொல்லி அண்ணாமலையை வெறுப்பேற்றி விட்டார்.

பிறகு அனைவரும் போன நிலையில் விஜயா, மனோஜிடம் நடிப்பதற்கு பணம் எதுவும் கிடையாது. ஆனாலும் உனக்கு என் சொந்த காசுலிருந்து பத்தாயிரம் ரூபா தருகிறேன் என்று பொய் சொல்லி என்னையே ஏமாற்றி விட்டாயா என்று கன்னத்தில் அடித்து விட்டு போகிறார். அடுத்து ரோகிணியும் இந்த அவமானம் எல்லாம் வேண்டாம் என்று தான் பணத்தை பற்றி சொல்லிவிடலாம் என சொன்னேன். எதுவும் கேட்காமல் இப்பொழுது பாரு எல்லாரும் முன்னாடியும் அவமானப்பட்டு நிற்கிறோம் என்று சண்டை போட்டு போய் விடுகிறார்.

அடுத்ததாக விஜயா, பார்வதி வீட்டில் பரதநாட்டியம் கிளாஸில் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருக்கிறார். அங்கே காதல் பண்ணிக் கொண்டிருக்கும் ரதியின் அம்மா வருகிறார். வந்ததும் விஜயா, ரதி இன் அம்மாவிடம் ரதியை பற்றி பெருமையாக சொல்கிறார். கூடிய சீக்கிரத்தில் உங்களுக்கு பெருமை சேர்க்கும் விதமாக உங்க பொண்ணு பெயர் வாங்கிக் கொடுப்பாள் என சொல்கிறார். அந்த வகையில் நிச்சயமாக திருட்டுத்தனம் ஏதாவது பண்ணி ரதி மாட்டிக் கொண்டு குடும்பத்தையும் விஜயாவின் பெயரையும் டேமேஜ் பண்ணப் போகிறார்.

அடுத்ததாக மீனா, பார்வதி வீட்டிற்கு பூ கொண்டு வந்து கொடுக்கிறார். உடனே மழை வர மாதிரி இருக்கிறது நான் போய் மொட்டை மாடியில் காய போட்டு இருக்கும் துணியை எடுத்துட்டு வருகிறேன் என்று பார்வதி கிளம்புகிறார். உடனே தியாகியாக இருக்கும் மீனா, நீங்கள் ஏன் மாடிக்கு ஏரி கஷ்டப்படணும். நான் போய் எடுத்துட்டு வருகிறேன் என்று சொல்லி துணியை எடுக்க மாடிக்கு போயிட்டு வந்ததும் கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக ரதியின் அம்மா சேலையை விற்கும் வேலை பார்ப்பதால் அவரிடம் சேலை வாங்கலாம் என்று கொண்டு வந்த சேலையை விஜயா பார்த்துக் கொண்டிருக்கிறார். அப்பொழுது அதில் ஒரு சேலை பிடித்து விட்டதால் பணம் கொடுப்பதற்காக பார்வதியிடம் அந்த பணத்தை எடுத்துட்டு வா என்று சொல்கிறார். உடனே பார்வதி அந்த பணத்தை தேடி பார்க்கிறார் அந்த பணம் அங்கே இல்லை.

பிறகு விஜயா, பார்வதியிடம் இப்பொழுது தானே மீனா வந்துட்டு போனா, போகும்போது மாடிக்கு போயிட்டு தானே போனா, அவள் தான் அந்த பணத்தை திருடி இருக்கணும் என்று சொல்லி வீட்டில் போய் கச்சேரி வைத்துக் கொள்கிறேன் என்று கிளம்பி விடுகிறார். ஆனால் அது தன்னுடைய பணம் என்று சொன்னால் எப்படி வந்தது யார் கொடுத்தது என்று ஏகப்பட்ட கேள்வி வரும். அதனால் உன்னுடைய பணம் என்று நான் சொல்கிறேன் என விஜயா சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார்.

அடுத்ததாக வீட்டிற்கு போன விஜயா, அங்கே எல்லோரும் இருக்கும் பொழுது பார்வதிக்கு போன் பண்ணி உன்னுடைய பையன் உனக்காக கொடுத்த பணத்தை காணுமா என்று ட்ராமா போட்டு ஒரு பிரச்சனையை ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் இந்த பழி அனைத்தும் மீனாவின் மீது தான் விழப்போகிறது. ஆனாலும் நடந்த விஷயத்தை சொல்லும் விதமாக பார்வதி, ரோகினி வீட்டிற்கு வந்ததையும் அந்த பணத்தை எடுத்துக் காட்டினதையும் சொல்லி ரோகிணியை சிக்க வைக்கப் போகிறார். இதற்கு பிறகு தான் விஜயாவுக்கு ரோகினி மீது சந்தேகம் வரப்போகிறது.

- Advertisement -

Trending News