Tamil Cinema News | சினிமா செய்திகள்
நடிகை மீனாவை பற்றி யாரும் அறிந்திராத சுவாரஸ்யமான தகவல்! வியப்பில் ஆழ்ந்த ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வரும் மீனா தனது ஆறு வயதிலேயே சினிமா பயணத்தை தொடங்கிவிட்டார். 90’s கிட்ஸ்களின் கனவுக் கன்னியாகவும் ரசிகர்களின் கண்ணழகி திகழ்ந்தவர் நடிகை மீனா.
இவருடைய தாயார் மலையாளி என்றாலும் தந்தை தமிழர் என்பதால் இவர் தமிழ் நடிகை தான். ஒருநாள் சொந்தக்காரரின் இல்ல திருமண விழாவில் சிறுவயது மீனாவின் துருதுரு நடவடிக்கையால், அங்கு வந்திருந்த நடிகர் திலகம் சிவாஜியின் பார்வையில் அதிக கவனத்தைப் பெற்றார்.
அதன்பின், 1982 ஆம் ஆண்டு சிவாஜி நடித்த ‘நெஞ்சங்கள்’ படத்தில் முதல் முதலாக குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மீனா.
அதைத் தொடர்ந்து சூப்பர்ஸ்டாரின் ‘அன்புள்ள ரஜினிகாந்த்’ படத்தில் குழந்தை பருவத்தில் நடித்த மீனா, அதன்பின், அதே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ‘முத்து’ படத்தில் கதாநாயகியாக நடித்த பெருமைக்குரிய ஒரே நடிகை மீனா தான்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம் போன்ற மொழிகளிலும் பல படங்களின் கதாநாயகியாக நடித்திருப்பார். சரளமாக ஆறு மொழி பேசியதால், பல முன்னணி கதாநாயகிகளுக்கு டப்பிங் செய்திருப்பார்.
உதாரணமாக சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தில் கதாநாயகி பத்மபிரியாவிற்கு நடிகை மீனா தான் குரல் கொடுத்திருப்பார்.
ஷாஜகான் படத்தில் விஜயுடன் சேர்ந்து மீனா குத்தாட்டம் போட்ட ‘சரக்கு வச்சிருக்கேன் இறக்கி வச்சிருக்கேன்…’ பாடலுக்கு கவர்ச்சி நடிகையை போல நடனமாடி ரசிகர்களை கொண்டாட்டத்தின் உச்சத்துக்கே கொண்டு சேர்த்திருப்பார்.
அந்த காலகட்டத்தில்தான் மீனா ஹீரோயினாக நடிக்கவிருந்த ‘பிரண்ட்ஸ்’ படத்தில் தேவயானி கதாபாத்திரமும், ‘பிரியமுடன்’ படத்தில் கௌசல்யா கதாபாத்திரமும்.
தற்போது இவருடைய ஒரே மகளான நைனிகா-வை சினிமாவிற்கு தளபதியின் ‘தெறி’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் செய்து ‘ குட்டி மீனா’ என செல்லமாக ரசிகர்கள் நைனிகாவை அழைக்க தொடங்கிவிட்டனர்.
அம்மா எட்டடி பாஞ்சா, குட்டி பதினாறு அடி பாயும் என்பதற்கு ஏற்றார்போல் நைனிகா தனது அம்மாவின் நடிப்பையே தூக்கி சாப்பிடும் அளவுக்கு பிரமாதமாக நடித்து வருகிறார்.
அதைப் போக்கிக் கொள்ள தனது மகளை அரவிந்த சாமியுடன் ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படத்தில் நைனிகா-வை நடிக்க வைத்து தனது ஆசையை போக்கிக்கொண்டுள்ளார்.
