வெள்ளிக்கிழமை, டிசம்பர் 13, 2024

மீனா கணவர் இறப்பிற்கு இதுவும் ஒரு காரணமா.? அதிர்ச்சியில் உறைந்து போன திரை பிரபலங்கள்!

மீனாவின் கணவர் சமீபத்தில் காலமான நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. மீனா 2009ஆம் ஆண்டு பெங்களூருவைச் சேர்ந்த மென்பொருள் என்ஜினீயரான வித்யாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

பெங்களூருவில் வாழ்ந்து வந்த மீனா சமீபத்தில் தன் குடும்பத்தார் எல்லோருக்கும் கொரோனா தொற்று பாதித்திருப்பதாக தெரிவித்திருந்தார் அதன்பின் அனைவருக்கும் உடல்நிலை சரியான நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகருக்கு மட்டும் நோய்த்தொற்று வந்த பிறகு நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

இதனிடையே சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வித்யாசாகர் பல நாட்கள் தீவிர சிகிச்சைக்குப் பிறகு சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். மேலும் பெங்களூருவில் இவர்கள் வாழ்ந்து வந்த போது பக்கத்தில் புறாக்களை வளர்த்து வந்ததையடுத்து புறாவின் எச்சத்தை சுவாசித்ததால் கூட வித்யாசாகரின் நுரையீரல் பாதிக்கப்பட்டதாக கூடுதல் தகவல் வெளியானது.

ஆனால் தற்போது வித்யாசாகர் இறப்பதற்கு முன்பு பல நாட்களாக அதிகப்படியான மன உளைச்சலில் இருந்துள்ளார் என்ற செய்தி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீனா திருமணத்திற்குப் பின் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில் சமீபத்தில் ரீ என்ட்ரி கொடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார்.

இது கணவர் வித்யாசாகருக்கு பிடிக்காமல் போக மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் பல முறை கருத்து வேறுபாடுகள் இருந்து வந்துள்ளதாம். மேலும் மகள் நைனிகாவையும் தளபதி விஜய் நடித்த தெறி படத்தில் மீனா நடிக்க வைத்தது வித்யாசாகருக்கு கொஞ்சம் கூட விருப்பம் இல்லையாம். மேலும் பெங்களூரில் உள்ள மீனாவின் மாமியார் வீட்டிலும் மீனா நடிப்பது பிடிக்காமல் சண்டைப்போட்டு, சென்னை வந்து தங்கி இருந்துள்ளனர்.

இதனால் வித்யாசாகர் பல நாட்கள் மன அழுத்தத்தில் இருந்து வந்ததாகவும் அவரின் இறப்பிற்கு சில நாட்களுக்கு முன்பு கூட மீனா தெலுங்கு படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இதனிடையே மீனாவின் கணவர் வித்யாசாகரின் மறைவிற்கும் மீனாவிற்கும் இதுபோன்று வேறு ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம் என கூறப்படுகிறது.

- Advertisement -

Trending News