திங்கட்கிழமை, நவம்பர் 4, 2024

அண்ணனுக்கு முன் காலுக்கு மேலே காலை போட்டு திமிரு காட்டிய மீனா.. கடும் கோபத்தில் ஜீவா!

விஜய் டிவியின் டாப் சீரியல்களில் ஒன்றான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஆனது குடும்ப கதையுடன் ரசிகர்களுக்கு பிடித்தமான ரொமான்ஸ் காட்சிகளையும் அவ்வப்போது ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த சீரியலில் காதல் திருமணம் செய்துகொண்ட கண்ணன்-ஐஸ்வர்யா தம்பதியரை வீட்டை விட்டு ஒதுக்கி வைத்துள்ள நிலையில், சமீபத்தில் மூர்த்தி வீட்டிற்குள் சேர்த்துள்ளார்.

இந்த சூழலில் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பப்பெண்கள் சேலை மட்டுமே கட்டுவதால், திடீரென்று ஐஸ்வர்யா நைட்டி போடுவதும், அதை தனம் கொஞ்சம் கூட கண்டிக்காமல் இருப்பது மீனாவிற்கு செம காண்டு ஆகிறது. அதை பொறுத்துக் கொள்ளமுடியாமல் மீனா தன்னுடைய கணவன் ஜீவாவிடம் நைட்டி வாங்கிக் கொடுக்குமாறு அடம்பிடிக்கிறார்.

அதை ஜீவா செய்ய மறுத்து விடுகிறார். பிறகு மீனா தன்னுடைய அம்மாவிடம் நைட்டி வாங்கித் தரச்சொல்லி, அதை போட்டுக்கொண்டு வீட்டில் இருக்கும் மற்றவர்கள் முன்பு கெத்து காமிக்கிறார். அதுமட்டுமின்றி நைட்டி போட்ட படி மூர்த்தி மற்றும் கதிர் அமர்ந்திருக்கும்போது அவர்களுக்கு சரிசமமாக நாற்காலியில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு திமிரு காட்டுகிறார்.

இதைப்பார்த்த தனம் மற்றும் மூர்த்தி இருவருக்கும் கோபம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி ஐஸ்வர்யா மற்றும் முல்லை இருவரும் மீனாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். எனவே மீனாவின் இந்த செயலை கண்டிக்க முடியாமல் ஜீவா வாயடைத்துப் போய் நிற்கிறார்.

எனவே பாண்டியன் ஸ்டோர் சீரியலில் அவ்வப்போது வில்லியாக காட்டப்படும் மீனா, அடுத்த எபிசோடில் பல்பு வாங்குவது வழக்கமாக இருக்கிறது. குறிப்பாக நைட்டி போட்டு கெத்து காண்பித்த மீனாவை பார்த்து கண்ணன், ‘நைட்டில குட்டி சாத்தான் போல் இருக்கிறீங்க’ என்று கலைத்துவிட்டார்.

இவ்வாறு பாண்டியன் ஸ்டோர் குடும்பம் மீனா நைட்டி போட்டதை பார்க்க சகிக்க முடியாமல் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் விதவிதமாக பங்கம் செய்கின்றனர். மேலும் அண்ணன் முன்பு கால் மேல் கால் போட்டது தவறான செயல் என்று மீனாவை இன்று இரவு ஜீவா வறுத்தெடுக்க காத்திருக்கிறார்.

- Advertisement -spot_img

Trending News