மீனாவின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.? அடேங்கப்பா

meena
meena

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து பிரபலமானவர் நடிகை மீனா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்த ரசிகர் மனதில் இடம்பிடித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் மீனா நெஞ்சங்கள் என்ற திரைப்படத்தில் சிவாஜி மூலம் அறிமுகமானார். அதன் பிறகு பல படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். மீனா தென்னிந்திய சினிமா உலகில் தவிர்க்க முடியாத ஒரு நாயகியாக மாறினார். தமிழ் சினிமாவில் ரஜினி, அஜித், விஜயகாந்த், சரத்குமார், பார்த்திபன், முரளி போன்ற உச்ச நட்சத்திரங்கள் உடன் நடித்துள்ளார்.

மீனா தொடர்ந்து நல்ல கதைகள் கொண்ட படத்தைத் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். அந்த படங்கள் எல்லாம் வெற்றி பெற ஒரு வருடத்திற்குள்ளே மூன்று அல்லது நான்கு படங்களில் நடித்து வந்தார். மீனா திருமணத்திற்குப் பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்டார்.

தற்போது உடல் எடையை குறைத்து ரஜினி நடிப்பில் வெளிவந்த அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். தப்போது மோகன்லால் நடிப்பில் வெளிவந்த த்ரிஷ்யம் 2 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மீனா ரவுடி பேபி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார். மீனாவின் மகள் நைனிகாவும் தற்போது திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வருகிறார்.

சமீபகாலமாக, திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகி வருகின்றது. அந்த வகையில், மீனாவின் சொத்து மதிப்பு பற்றிய தகவலும் வெளியாகியுள்ளது. அதன்படி, இவரின் முழு சொத்து மதிப்பு 83 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

Advertisement Amazon Prime Banner