17 கிலோ உடல் எடையை குறைத்த மீனா.. சிக்குன்னு வைரலாகும் புகைப்படம்

90களில் தென்னிந்திய சினிமாவை ஆண்ட நடிகைகளில் மிக முக்கிய பங்கு மீனாவுக்கு தான். அழகும் கவர்ச்சியும் நிறைந்த இவர் அன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியாக தெறிக்க விட்டவர்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிறகு தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார்.

தற்போது இவருக்கு அழகிய பெண் குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தை தளபதி விஜய் நடிப்பில் வெளியான தெறி படத்தில் விஜய்க்கு மகளாக நடித்து பிரபலம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒதுங்கியிருந்த மீனா தற்போது ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார், அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

இந்த படத்திற்காக கிட்டத்தட்ட 17 கிலோ உடல் இடையை குறைத்து உள்ள புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை உசுபேத்தி உள்ளார் மீனா. தல தளபதியுடன் ஜோடி போடும் அளவிற்கு தனது அழகை மெருகேற்றி உள்ளார் என்று ரசித்து வருகின்றனர்.

meena
meena