fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

காலையில் வெறும் வயிற்றில் 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்க.. கொரோனா வைரஸ் கிட்ட கூட அண்டாதாம்

corona

India | இந்தியா

காலையில் வெறும் வயிற்றில் 3 நாள் இதை மட்டும் சாப்பிடுங்க.. கொரோனா வைரஸ் கிட்ட கூட அண்டாதாம்

டெல்லி: ஆயுஷ் அமைச்சகத்தின் கீழ் உள்ள மத்திய ஹோமியோபதி ஆராய்ச்சி கவுன்சிலின் (சி.சி.ஆர்.எச்) அறிவியல் ஆலோசனைக் குழுவின் கூட்டம் புதன்கிழமை டெல்லியில் நடந்தது.

இந்த கூட்டத்தில் ஹோமியோபதி மூலம் என்.சி.ஓ.வி (கொரோனா வைரஸ்) தொற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள் மற்றும் வழிமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது இந்த கூட்டத்திற்கு பின் முக்கிய அறிவிப்பை ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

இதன்படி ஹோமியோபதி மருந்தான, Arsenicum album 30 என்பதை, தினமும் காலை வெறும் வயிற்றில் 3 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது, கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்கு பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவேளை, பாதிப்பு தொடர்ந்தால், இதே மாதிரியில், தொடர்ச்சியாக ஒரு மாதத்திற்கு இந்த மருந்தை உட்கொண்டால் பலன் கிடைக்கும். இன்ப்ளூயென்சா போன்ற நோய்த் தொற்றுக்கும், இதே மருந்தை இதே பாணியில் உட்கொண்டு நலம் பெறலாம்.

கொரோனா வைரஸ் காற்றின் மூலமாக ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு பரவுகிறது. எனவே தனிநபர்கள் சுத்தம் மற்றும் சுகாதாரத்தை பின்பற்றி வாழ்ந்தால் நோய் இன்றி வாழலாம். அடிக்கடி சோப் மற்றும் தண்ணீரை பயன்படுத்தி கைகளைக் கழுவிக் கொள்ள வேண்டும்.

கழுவாத கைகளை கொண்டு, கண்கள் மூக்கு மற்றும் வாய் ஆகியவற்றையும் கழுவாத கைகளால் தொடக்கூடாது.. நோய்வாய்ப்பட்ட நபருடன் நெருக்கமாக பழக கூடாது.

இருமல் அல்லது தும்மலின்போது துணியால் முகத்தை மூடிக் கொள்வது நல்லது. N95 முகமூடியை பயன்படுத்துவது நல்லது., பணி நேரத்தின்போதும் அல்லது பொது இடங்களுக்கு செல்லும் போதும் முகமூடியை பயன்படுத்தலாம்.

corona-sym

corona-sym

உங்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக சந்தேகித்தால் உடனடியாக ஒரு முகமூடியை அணிந்து கொண்டு அருகே உள்ள மருத்துவரை தொடர்புகொள்ள வேண்டும் என ந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top