Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி பேசாத ஒன்றை பேசியதாக பரப்பி வரும் சேனல்கள்.. விஜய்யை மாட்டிவிட சதி
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்தது. அனிருத் இசையமைத்திருக்கும் மாஸ்டர் படத்தின் பாடல்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.
சேவியர் பிரிட்டோ, லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியிருக்கும் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நேற்று சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் நடைபெற்றது.
இதில் தளபதி விஜய் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர்.
ரசிகர்கள் அதிகம் இல்லாததால் ஆடியோ வெளியீட்டு விழா வெறிச்சோடி காணப்பட்டது. அதற்கு காரணம் பிகில் பட ஆடியோ வெளியீட்டு விழாவில் போலீசார் தடியடியில் ஈடுபட்டது தான் என விஜய் மேடையில் கூறி வருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எப்போதும் போல் தளபதி விஜய் என்ன பேசுவார் என எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு இந்த வாட்டி மற்ற ரசிகர்களும் கொண்டாடும் அளவுக்கு பேச்சில் மிரட்டி விட்டார். அவர் அரசியல் பற்றி பேசாத ஒன்றை தற்போது பேசியதாக பல வதந்திகள் பரவி வருகின்றன.
சமீபத்தில் அவர் வீட்டில் நடந்த வருமான வரித்துறை ரெய்டு பற்றி விளையாட்டாக பேசினார் என்றாலும் மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்த CAA சட்டத்தைப் பற்றி விஜய் பேசவே இல்லை. ஆனால் பத்திரிகையாளர்கள் விஜய், மக்களுக்காகத்தான் சட்டத்தை கொண்டு வர வேண்டுமே தவிர சட்டத்தைக் கொண்டுவந்து விட்டு மக்களை அதற்குள் அடக்கக் கூடாது என கூறியதாக பரப்பி வருகின்றனர்.
இதனை தளபதி ரசிகர்கள் வன்மையாக கண்டித்தும் வருகின்றனர்.
