fbpx
Connect with us

‘மிருதன்’ என்பதன் அர்த்தம் என்ன? ஜெயம் ரவி விளக்கம்

News | செய்திகள்

‘மிருதன்’ என்பதன் அர்த்தம் என்ன? ஜெயம் ரவி விளக்கம்

Miruthan-Movieஜெயம் ரவி நடிப்பில் நாளை வெளிவரவுள்ள ‘மிருதன்’ திரைப்படம் தமிழில் வெளிவரும் முதல் ஜோம்பி படம் என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பை பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டிலான மிருதன் என்ற வார்த்தையை இதுவரை யாரும் கேள்விப்பட்டிருக்கவே மாட்டார்கள். மிருதன் என்றால் மிருகமும் மனிதனும் கலந்த கலைவை என்பது என்றும் மிருகம் என்ற வார்த்தையின் முதல் இரண்டு எழுத்தும் மனிதன் என்ற வார்த்தையின் கடைசி இரண்டு எழுத்தும் சேர்ந்தது என்றும் ஜெயம் ரவி தன்னுடைய படத்தின் டைட்டிலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.

மேலும் இந்த படத்தின் ஜோம்பிகளுக்கு மேக்கப் செய்ய ஹாலிவுட்டில் இருந்து யாரும் வரவில்லை என்றும் நமது உள்ளூர் மேக்கப்மேன்களே சிறப்பாக மேக்கப் செய்தார்கள் என்றும், தினமும் இதற்காகவே பலமணி நேரம் ஆயிற்று என்றும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக கிளைமாக்ஸில் 500 ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களுக்கு மேக்கப் போட்டது ஒரு சவாலான பணி என்றும் கூறப்படுகிறது.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடித்திருந்தாலும் இந்த படத்தில் ரொமான்ஸ் காட்சிகள் மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. ‘நாய்கள் ஜாக்கிரதை’ இயக்குனர் சக்தி செளந்திரராஜன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News | செய்திகள்

Advertisement

Trending

To Top