Mayilsamy-Comedian
Mayilsamy

நடிகர் மயில்சாமி சமுகத்தில் மக்களுக்காக சில நல்ல விஷயங்களுக்கு குரல் கொடுத்து வருகிறார். ஏற்கனவே ஜல்லிக்கட்டு விசயத்தில் தனது கருத்தை வீடியோ மூலம் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

தற்போது மீண்டும் அவர் ஒரு நல்ல விசயத்துக்காக குரல் கொடுத்துள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளிலும் பெண்கள் மதுக்கடைகளை மூடவேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதில் திருப்பூரில் போராட்டம் நடத்திய பெண்களை உயர் போலிஸ் அதிகாரிகள் தாக்கினர். சமீபத்தில் டிவி நிகழ்ச்சியில் பேசிய அவர் இது குறித்து தனது கருத்தை ஆவேசமாக பதிவு செய்துள்ளார்.

மதுக்கடைகள் வருவதை மக்கள் விரும்பவில்லை. அதை திறக்கக்கூடாது என்று தானே போராடினார்கள். அவர்களை இப்படியா அடிப்பது, தலை முடியை பிடித்து இழுப்பது. அவர் கணவர் கூட இப்படி செய்திருக்கமாட்டான்.

இது காட்டு மிராண்டி செய்யும் வேலை. உங்கள் அராஜகமான செயலுக்கு மக்கள் உங்களை திருப்பி அடித்தால், ராணுவமே வந்தாலும் தாங்க முடியாது என பேசினார்.