Tamil Cinema News | சினிமா செய்திகள்
11 வருடங்களுக்கு பிறகு உருவாகும் மாயாண்டி குடும்பத்தார் 2.. ஹீரோ இந்த வாரிசு நடிகர் தான்!
தமிழ் சினிமாவில் ஒரு இடைவெளிக்குப் பிறகு குடும்பத்தை மையமாக வைத்து வெளியான திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார்.
2009ஆம் ஆண்டு வெளியான மாயாண்டி குடும்பத்தார் திரைப்படம் சிட்டி முதல் பட்டிதொட்டி வரை அனைத்து இடத்திலும் செம்ம வரவேற்பை பெற்றது.
ஐந்து இயக்குனர்கள் ஒரே படத்தில் அண்ணன் தம்பிகளாக நடித்து அசத்தினர். சீமான், பொன்வண்ணன், மணிவண்ணன், தருன் கோபி, கேபி ஜெகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இந்த படத்தை ராசு மதுரவன் இயக்கியிருந்தார். ஆனால் அவர் தற்போது உயிருடன் இல்லை.
இந்நிலையில் பதினொரு வருடங்கள் கழித்து மீண்டும் மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவின் வாரிசு நடிகரான கௌதம் கார்த்திக் நடிக்க உள்ளாராம்.
ஒரு கல்லூரியின் கதை படத்தை இயக்கிய நந்தா பெரியசாமி மாயாண்டி குடும்பத்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளாராம். மற்ற நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என தகவல்கள் கிடைத்துள்ளது.

mayandi-kudumbathar-cinemapettai
