என் கேரக்டரையே புரிஞ்சுக்கலையே கண்ணு.. பூர்ணிமா மூஞ்சில கரிய பூசிய மாயா, நண்பேன்டா

Biggboss 7-maya-poornima: நேற்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளர்கள் உள்ளே வந்ததிலிருந்து ஆட்டமே தலைகீழாக மாறி இருக்கிறது. அதிலும் ரசிகர்களால் மிகவும் வெறுக்கப்பட்டு வந்த மாயா, பூர்ணிமா இருவரும் எதிரதிர் துருவங்களாக மாறி போகும் நிலைக்கு வந்திருக்கின்றனர்.

இப்படி ஒரு தருணம் நடக்காதா என காத்திருந்த ரசிகர்களுக்கு தற்போது வெளியான ப்ரோமோ செம்ம ட்ரீட் ஆக அமைந்துள்ளது. அதன்படி இந்த வாரம் ஓப்பன் நாமினேஷன் நடைபெறுகிறது. அதில் பலரும் விக்ரமுக்கு தான் ஓட்டு போடுகின்றனர். ஆனால் பூர்ணிமா நேற்று தன்னை டார்கெட் செய்த அனன்யாவை நாமினேட் செய்து தன் கோபத்தை காட்டுகிறார்.

Also read: கமல் கேட்ட கேள்விக்கு சூடு சொரணை இருந்தா தூக்குல தொங்கிடு பூர்ணிமா.. சரியான சவுக்கடி

இதில் அவரே எதிர்பாராத ஒன்றுதான் மாயாவின் வில்லத்தனம். அந்த வகையில் அவர் ஒன்று பூர்ணிமா இந்த வீட்ல இருக்கணும் இல்ல நான் இருக்கணும் என சொல்லி அவரை நாமினேட் செய்தார். இதை கொஞ்சம் கூட எதிர்பார்க்காத பூர்ணிமா வெளிப்படையாகவே தன் அதிர்ச்சியை காட்டினார்.

ஆரம்பத்தில் இருந்தே மாயா டம்மியான போட்டியாளர்கள் ஒவ்வொருவரையும் வெளியேற்றி வந்தார். அதில் பிரதீப்பை அவர் திட்டம் போட்டு வெளியேற்றியது கடுமையான போட்டியாளர் என்ற பயம் தான். இவ்வாறாக நினைத்ததை நடத்தி வந்த மாயா இப்போது நண்பேன்டா என சுற்றி வந்த பூர்ணிமாவை டார்கெட் செய்திருக்கிறார்.

Also read: குழம்பிய குட்டையில் மீன் பிடித்த பிக்பாஸ்.. வைல்ட் கார்ட் பத்த வச்ச நெருப்பால் ஆட்டம் கண்ட மாயா மாஃபியா

நாமினேஷன் மூலம் அவர் மூஞ்சில கரியை பூசிய மாயா இந்த வாரம் போறதுக்கு முன்னாடி என்ன செய்யப் போறீங்க என கேட்கிறார். அதை கேட்டு அதிர்ந்து போன பூர்ணிமா கண்ணீர் விடுவது போன்ற ப்ரோமோ இப்போது வைரலாகி வருகிறது. ஆக மொத்தம் மாயாவின் கேரக்டரையே புரிஞ்சுக்காம இருந்த பூர்ணிமாவை பார்த்தால் பரிதாபமாக தான் இருக்கிறது.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்