Tamil Cinema News | சினிமா செய்திகள்
சம்மர் ஸ்பெஷல்.. மே மாதம் ரிலீஸ்க்கு காத்திருக்கும் பிரம்மாண்ட திரைப்படங்கள்..!
மே மாதம் ரிலீசாக உள்ள திரைப்படங்கள்
மிஸ்டர் லோக்கல்
சிவகார்த்திகேயன்,நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மிஸ்டர் லோக்கல். இப்படத்தில் சந்தானம் காமெடியனாக நடித்து உள்ளார் இப்படத்தை எம் ராஜேஷ் இயக்கியுள்ளார்.
அயோக்கியா
இப்படத்தில் விஷால், ராசி கண்ணா மற்றும் பார்த்திபன் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை வெங்கட் மோகன் இயக்கியுள்ளார்.
தேவி -2
பிரபுதேவா, தமன்னா நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் தேவி 2.
இப்படத்தில் நந்திதா ஸ்வேதா, கோவை சரளா மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
என்.ஜி.கே
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் என். ஜி.கே இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி நடித்துள்ளனர் . இப்படத்தை செல்வராகவன் இயக்கத்தில் யுவன் இசையில் வெளிவர உள்ளது. சூர்யா ரசிகர்கள் மற்றும் செல்வராகவன் ரசிகர்கள் இரு தரப்பு ரசிகர்களும் மிகவும் எதிர்பார்த்து உள்ளனர்.
கொரில்லா
ஜீவா, ஷாலினி பாண்டே ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.
கொலைகாரன்
இப்படத்தில் விஜய் ஆண்டனி,ஆஷிமா நார்வால் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களில் அர்ஜுன் நடித்து வருகிறார். இப்படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
தர்ம பிரபு
யோகி பாபு,ராதாரவி மற்றும் ஆர்.ஜே.ரமேஷ் ஆகியோர் நடிப்பில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் யோகிபாபு நடித்துள்ளதால் ரசிகர்கள் இப் படத்தை மிகவும் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
#May2019 Tamil Releases:#MrLocal#Ayogya#Devi2#Gorilla #Kolaigaaran#DharmaPrabhu#NGK
— Cinemapettai (@cinemapettai) March 28, 2019
