Connect with us

Sports | விளையாட்டு

விரேந்தர் ஷேவாக்கின் ‘பேபி சிட்டர்’ விளம்பரம். பொங்கி எழுந்த மேத்யூ ஹெய்டன். கூலாக பதில் தட்டிய ரிஷப் பண்ட்.

சேவாக் என்றுமே இன்ஸ்பிரேஷன் தான் என ட்வீட் செய்த ரிஷப் பண்ட்.

இந்திய கிரிக்கெட் வட்டாரங்களில் சமீபகாலமாக அதிகம் பேசப்படும் பெயர். வர்ணனையாளர்கள் தொடங்கி, ரசிகர்கள், சக வீரர்கள், கோச்சுகள் வரை ஆச்சர்யமாக பார்க்கும் ஒரு வீரர்.

சென்ற ஆஸ்திரேலிய தொடரில் டெஸ்ட் போட்டிகளில் இவர் ஆடிய பொழுது ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் –  பண்டை பேபி சிட்டர் என ஸ்லெட்ஜிங் செய்தார். தற்காலிக கேப்டன் என்று ரிஷப் பண்ட் திருப்பி கிண்டல் செய்தார். இந்த விகாரம் அத்துடன் முடிந்தது. டிம்மின் குழைந்தைகளுடன் பண்ட் க்ளிக்கிய போட்டோஸ் அப்போதைய ட்ரெண்டிங் சமாச்சாரம் தான்.

வரும் ஞாயிறு முதல் ஆஸ்திரேலியா உடனான போட்டிகள் துவங்குகிறது. அதனை ப்ரொமோட் செய்ய ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேவாக் வைத்து இந்த விளமபரத்தை வெளியிட்டனர். ஆஸ்திரேலிய அணியின் ஜெர்சி அணிந்துள்ள சிறுவர்களுடன் வீரேந்திர சேவாக் தோன்றுவது போன்ற விளம்பரம் அது.

இந்த வீடியோவிற்கு மேத்யூ ஹெய்டன் பதில் தட்டினார். “ஜாக்கிரதையாக இருங்கள். ஆஸ்திரேலியாவை ஜோக்காக எடுக்காதே விரு பையா. உலகக்கோப்பையை யார் வைத்துளார்கள் என்பதை நினைவில் ஏற்றிக்கோ.” என்பதே அது.

இந்நிலையில் இதில் சம்பந்தப்ட்ட பண்ட், ஸ்டேட்டஸ் தட்டினார். அதில் “விரு பாஜி எவ்வாறு நல்ல கிரிக்கெட் ஆடுவது குழந்தை பராமரிப்பாளராகவும் இருப்பது என காண்பித்துள்ளார். என்றுமே இன்ஸபிரேஷன் அவர்.” என்றார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

To Top