பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, யுவராஜ் சிங் ஆகியோர் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாடே ஆவலுடன் எதிர்பார்த்த பாகிஸ்தானுக்கு எதிரான சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதனாத்தில் கடந்த ஜூன் 18 ஆம் திகதி நடந்தது.

இதில் 180 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் முதன்முறையாக சாம்பியன்ஸ் கிண்ணத்தை வென்றது. இந்நிலையில், சாம்பியன்ஸ் கிண்ணம் இறுதிப்போட்டியில் இந்திய அணியின் தலைவர் விராட் கோஹ்லி, மற்றும் யுவராஜ் சிங் ஆகியோர் மேட்ச் பிக்சிங்சில் ஈடுபட்டதாக மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  விஜய் பிறந்தநாளில் சத்தமில்லாமல் சூர்யா செய்த சாதனை...

அவர் பேசும்போது “இந்தியா வென்றாக வேண்டிய சூழலில் உள்ள போட்டிகளில் அணித்தலைவர் விராட் கோஹ்லி சதமடித்து சிறப்பாக விளையாடியிருக்கிறார்.

அதிகம் படித்தவை:  புயல் மியான்மர் பக்கம் சென்றதால் தமிழகத்துக்கு வெப்பம் தான் மிச்சம்

அதேபோல், மூத்த வீரரான யுவராஜ் சிங்கும் கடந்த போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தையே கொடுத்திருக்கிறார். அப்படியிருக்க இறுதிப்போட்டியில் மட்டும் சரியாக விளையாடாமல் பாகிஸ்தானிடம் தோல்வியை சந்தித்தது ஏன்?

எனில், அந்த போட்டியில் மேட்ச் பிக்சிங் நடந்துள்ளதா?. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளார்.