புனே அணிக்கு எதிரான ஐ.பி.எல் லீக் போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணி  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ஐ.பி.எல் பத்தாவது சீசனின் 30வது  லீக் போட்டியில் புனே அணியும் கொல்கத்தா அணியும் பலப்பரீட்சை செய்கின்றன.

புனேவில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்றுள்ள கொல்கத்தா அணியின் கேப்டன் கவுதம் காம்பீர்  பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

தென் ஆப்ரிக்கா அணியின் அதிரடி ஆட்டக்காரரான டூபிளஸிஸை இன்றைய போட்டியில் களமிறக்குகிறது புனே அணி.

அதே போல் பெங்களூர் அணியில் பியூஸ் சாவ்லா  மற்றும் டேரன் பிராவோ ஆகியோர் இன்றைய போட்டியில் களமிறங்குகின்றனர்.