Tamil Cinema News | சினிமா செய்திகள்
கொடுத்த பணத்தை திரும்ப கேட்கும் விநியோகஸ்தர்கள்.. தடுமாறி தவிக்கும் மாஸ்டர்
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முதல் முறையாக உருவாகியிருக்கும் திரைப்படம் மாஸ்டர். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
அனிருத் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தை விஜய்யின் உறவினர் சேவியர் பிரிட்டோ பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளார். இணை தயாரிப்பாளர்களாக ஜெகதீஸ் மற்றும் லலித் குமார் ஆகியோரும் உள்ளனர்.
மாஸ்டர் படம் திட்டமிட்டபடி ஏப்ரல் 9ஆம் தேதி வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தது. இதற்காக போஸ்ட் புரடக்ஷன்ஸ் பணிகளும் தற்போது முடிவடைந்து மாஸ்டர் படம் முழுமையாக ரெடியாகிவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பே மாஸ்டர் படத்தின் வியாபாரத்தை முடித்து விட்டதாக படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் கொரானா பிரச்சனை காரணமாக மாஸ்டர் படத்தின் வெளியீடு தள்ளிக் சென்று விட்டது என்பது அனைவரும் அறிந்ததே.
மாஸ்டர் படம் தற்போது வெளியிடப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் பட விநியோகஸ்தர்கள் தாங்கள் கொடுத்த பணத்தை திரும்ப கேட்கிறார்கள் என செய்திகள் வெளிவந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வாங்கிய பணத்திற்கு வட்டி கட்ட முடியாது எனவும் கோரிக்கை வைத்து வருகிறார்களாம்.
ஏற்கனவே மாஸ்டர் படம் அமேசன் பிரைமில் வெளியாகிறது என ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது. இந்நிலையில் மேலும் விநியோகஸ்தர்கள் தொடர் குடைச்சல் கொடுத்த நிலையில் உள்ளதால் மாஸ்டர் படக்குழுவினர் செய்வதறியாது திகைத்து வருகின்றனர்.
மாஸ்டர் விஜய்யின் சொந்த தயாரிப்பு எனவும் பல வகையில் செய்திகள் வெளிவந்துள்ளது. இதனால் விஜய்யும் பலத்த யோசனையில் இருப்பதாக தெரிகிறது.
இது என்னடா மாஸ்டருக்கு வந்த சோதனை!
