Tamil Cinema News | சினிமா செய்திகள்
தளபதி 65 இயக்குனர் ஷங்கரா.? மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழா.. மிரட்டப் போகும் விஜய்
தளபதி விஜய்யின் மாஸ்டர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா இன்று கோலாகலமாக சென்னை லீலா பேலஸில் வைத்து நடைபெற உள்ளது. இதற்கு பிரபலங்கள் மட்டும் அழைக்கப்பட்டு ரசிகர்களை ஒதுக்கி வைத்துள்ளனர் படக்குழுவினர்.
இதற்கு முக்கிய காரணம் பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் அதிக அளவில் குவிந்ததால் நிறைய பேர் உள்ளே வரமுடியாமல் தவித்தனர். இதனால் தளபதி அனைத்து ரசிகர்களும் நேரடியாக பார்க்கட்டும் என்று கூறிவிட்டாராம்.

malavika
இது மட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை இரண்டு நாட்களாக ஒளிபரப்பலாம் அப்படி செய்தால் அதிகமாக விளம்பரம் போட்டு லாபத்தை எடுக்கலாம் சன் டிவி. ஆனால் சன் டிவி தளபதி கூறியதை ஏற்று ஒரே நாளில் நேரலையில் ஒளிபரப்புகிறது. இதனால் சன் டிவிக்கு நஷ்டம் தான் என்றாலும் படத்தில் கோடிகோடியாக அள்ளி விடலாம் என்பதுதான் தொழில் நேக்கு.
மற்றுமொரு காரணம் அதிக அளவில் தற்போது கொரோனவின் பாதிப்பு இருப்பதால் ரசிகர்கள் அதிகமாக கூட வேண்டாம் என்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மாஸ்டர் ஆடியோ வெளியீட்டு விழாவில் முக்கியமாக தளபதி சொல்லப்போகும் குட்டி கதைக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர் ஏனென்றால் தேவை இல்லாமல் வருமான வரி சோதனை நடைபெற்றது கண்முன் வந்து போகுமா இல்லையா.
விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அனிருத், சங்கீதா விஜய், விஜயுடன் சேர்ந்து நடித்த நண்பர்கள் போன்ற பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இயக்குனர் ஷங்கர் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளதால் அடுத்த படத்தை ஷங்கர் இயக்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக மாஸ்டர் வட்டாரங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.

master
ஆடியோ வெளியீட்டு விழாவின் மேடையை பார்க்கும்போது ஜெயில் அல்லது காவல் நிலையம் போன்று அமைக்கப்பட்டுள்ளதாம். ஆன் தி வே, தரமான குட்டி கதை உள்ளது என்று பதிவிட்டு ரசிகர்களை பிரபலங்கள் ட்விட்டரில் உசுப்பேற்றி வருகின்றனர்.
