சன் டிவியில் மட்டமான TRP பெற்ற மாஸ்டர்.. விஸ்வாசம் 3வது ஒளிபரப்பை கூட தொட முடியாத சோகம்

விஜய் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் கடந்த பொங்கலுக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற மாஸ்டர் திரைப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14 ஆம் தேதி சன் டிவியில் முதல் முறையாக ஒளிபரப்பப்பட்டது.

இதற்கு முன் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் திரைப்படம் மட்டும்தான் சன் டிவியில் இதுவரை அதிகம்பேர் பார்க்கப்பட்ட டிஆர்பி சாதனையை படைத்துள்ளது. கிட்டத்தட்ட 18.1 மில்லியன் பார்வையாளர்களை குவித்துள்ளது.

viswasam-TRP-records
viswasam-TRP-records

அதன் பிறகு பல திரைப்படங்கள் சன் டிவியில் முதல்முறை ஒளிபரப்பப்பட்டாலும் தற்போது வரை தவிர்க்க முடியாத சாதனையாக இருந்து வருகிறது விஸ்வாசம் திரைப்படம். விஜய் படங்களுக்கு சிம்ம சொப்பனமாகத் அமைந்து வருகிறது.

எப்போதுமே டிஆர்பி யில் விஜய் படங்கள் ஏகப்பட்ட வரவேற்பு பெறும். ஆனால் சமீபத்தில் வெளியான மாஸ்டர் திரைப்படம் விஜய்யின் கேரியரில் இதுவரை இல்லாத அளவுக்கு சன் டிவியில் மட்டமான டிஆர்பியை பெற்றுள்ளது.

வெறும் 13 மில்லியன் பார்வையாளர்களை மட்டுமே தொட்டுள்ளது மாஸ்டர் திரைப்படம். இதற்கு முன்னர் சன் டிவியில் நேரடியாக ஒளிபரப்பபட்ட தெறி, பைரவா, பிகில் போன்ற படங்களை விட குறைவான பார்வையாளர்களை மட்டுமே பெற்றுள்ளது.

master-trp-chart
master-trp-chart

மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளியான அடுத்த பதினைந்தாவது நாளில் அமேசான் தளத்தில் நேரடியாக வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. எது எப்படியோ, சும்மாவே தல ரசிகர்கள் ஆட்டம் போடுவார்கள், இப்போது சலங்கையை வேறு கட்டிவிட்டார்கள். இனி சமூக வலைதளத்தை என்ன பாடு படுத்தப்போகிறார்களோ.